சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
நோயாளி : டாக்டர் எனக்கு முகமெல்லாம் அரிக்குது...
டாக்டர் : ஏன் இப்படி வீங்கியிருக்கு? என்ன ஆச்சு... அலர்ஜியா?
நோயாளி : இல்ல டாக்டர்... பூச்சி கடிச்சிருச்சி... மெடிக்கல் ஷாப்ல மருந்து கேட்டேன்.
டாக்டர் : அவங்க ஏதாச்சு லூசுத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...
நோயாளி : உங்களதான் போயி பாக்கச்சொன்னாங்க...
டாக்டர் : 😳😳
----------------------------------------------------------------------------------------
இலவசத் திருடன்...!!
ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அதில் ஊரின் சிறந்த திரையரங்கில், புதிய படத்திற்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும் இதை அனுப்பியவர் யார்? என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்... என்றொரு குறிப்பும் இருந்தது. தம்பதிகள் இருவரும் எவ்வளவோ சிந்தித்து பார்த்தும் அவர்களால் யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி... வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது... அதில்... என்ன? படம் சூப்பரா? என்று எழுதியிருந்தது. அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது. ஐயோ... களவாணிப்பயலா அவன்? என்று..
நீதி :
இலவசம் என்று யார், எதை கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே. உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை...!!
----------------------------------------------------------------------------------------
அமைதி...
அமைதியை தேடி இமயமலை செல்லத் தேவையில்லை...
டவர் இல்லாத இடத்திற்கு சென்றாலே போதுமானது...
கோபத்தில் இருக்கும்போது...!!
நீ கோபத்தில் இருக்கும்போது எதையும் பேசாதே...
உன் உயிரானவர்கள் கோபத்தில் இருக்கும்போது பேசும் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாதே...!!
----------------------------------------------------------------------------------------
வெற்றி...!!
பலமுறை முயற்சி செய்... ஒருமுறை வெற்றி காண...
சலித்துக்கொள்ளாமல் மேற்கொள்ளும் விடாமுயற்சி என்றும்
வெற்றிப்பதையிலேயே கொண்டு சேர்க்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக