இனி இந்தியாவில்
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினை செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
விதித்திருந்த தடையையும் ரத்து செய்துள்ளது.
கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் பயன்பாட்டுக்கு
ரிசர்வ் வங்கி முன்பு தடை விதித்திருந்தது. இதனால் இந்தியாவில் பிட்காயின்
வர்த்தகம் சட்டவிரோதமாக இருந்து வந்தது.
உச்ச
நீதிமன்றம் அனுமதி
ஆனால் அப்படி எல்லாம் இல்லை, என்று இது
குறித்தான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிட்காயின் பயன்பாட்டுக்கு அனுமதி
அளித்துள்ளது. உலகின் மிக மதிப்பு வாய்ந்த கிரிப்டோகரன்ஸியாக பிட்காயின் இருந்து
வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் 5-ம், 2018 ஆம் ஆண்டு வங்கிகள்
கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனகளை ஏற்றுக் கொள்ள கூடாது என்று கூறியதன் பேரில், இது
வங்கிகளிலும் தடை செயப்பட்டது.
ஆன்லைன்
வர்த்தகம்
ஆன்லைன் வர்த்தகம் இன்றைய அளவில்
முதலீட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய நாளில், கிரிப்டோகரன்ஸியும் முக்கிய
முதலீட்டு திட்டமாக கருதப்பட்டு வருகிறது. இந்த கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில்
பாகுபாடின்றி குறைந்த அளவில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் செய்யப்பட்டு வருவதை
பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.
வங்கிகளுக்கும்
ஆர்பிஐ தடை
ஆனால் உலகில் சில நாடுகளில் இந்த
கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த டிஜிட்டல்
கரன்சியை இந்திய ரிசவ் வங்கி தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிசர்வ்
வங்கி வணிக வங்கிகளுக்கு, நிதி நிறுவனங்களும் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்ய
எவ்விதமான உதவியும், சேவையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக் கூடாது எனவும்
திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
நடவடிக்கை
இந்த நிலையில் இந்தியாவில் பிட்காயின்
போன்ற கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு 2018-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி விதித்த
கட்டுப்பாடுகளை நீக்க கோரி இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா
அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி பிட்காயின்
போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
எதற்காக
கட்டுப்பாடு
ஆனால் வங்கிகளை பண மோசடி,
தீவிரவாதத்துக்கு நிதி போன்ற அபாயங்களிலிருந்து பாதுகாக்கவே இந்த கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்போது தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட
வழக்கில் கிரிப்டோகரன்சி குறித்த ஆர்பிஐயின் 2018ம் ஆண்டு சுற்றறிக்கை சரியான
காரணமற்றது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இனி
வர்த்தகம் செய்து கொள்ளலாம்
மேலும் ரிசர்வ் வங்கியின் தடையை ரத்து
செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இனி பிட்காயின் போன்ற
கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும்
வங்கிகளும் கிரிப்டோகரன்சி மூலம் பரிவர்த்தனைகளை செய்யவும் உச்சநீதிமன்றம் அனுமதி
அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்த தடை நீக்கமானது
முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக