>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 22 நவம்பர், 2019

    இன்றைய கடி... வயிறு குலுங்க சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க மட்டுமே !!
    ஜானகி : என் மருமகளுக்கு ரொம்பதான் கொழுப்பு.
    ரோகிணி : ஏன் என்ன செஞ்சா?
    ஜானகி : நான் பாலை வெச்சு பால்கோவா பண்றேன். நீங்க ரசத்தை வெச்சு ரசுகுல்லா பண்ணுங்க-ன்னு சொல்றா.
    ரோகிணி : 😆😆
    ------------------------------------------------------------------------------------------------------------
    ஆசிரியர் : கண்பார்வை யாருக்கு அதிகம்? விலங்குகளுக்கா, மனிதர்களுக்கா?
    மாணவன் : விலங்குகளுக்குத்தான்.
    ஆசிரியர் : எப்படி?
    மாணவன் : விலங்குகள் எதுவும் கண்ணாடி போடறதில்லையே ..!!
    ஆசிரியர் : 😜😜
    ------------------------------------------------------------------------------------------------------------

    கணவன் : சேலை கட்டியிருக்கும்போது மகாலட்சுமி மாதிரியே இருக்க.
    மனைவி : யாருங்க அந்த மகாலட்சுமி?
    கணவன் : எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
    மனைவி : 😡😡
    ------------------------------------------------------------------------------------------------------------

    சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலையே?
    ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்ச?
    சோமு : 😬😬
    ------------------------------------------------------------------------------------------------------------

    கண்டக்டர் : யோவ்.. நான் விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்க....?
    டிரைவர் : இங்கே மட்டும் என்ன வாழுதாம்......?
    நான் பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி அது பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்குதே...?
    கண்டக்டர் : 😳😳
    ------------------------------------------------------------------------------------------------------------

    இன்றைய கடி !!
    👉 முன்னாடி வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும், பின்னாடி  வீல ஓவர்டேக் பண்ண முடியாது.

    👉 பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம். ஆனா, பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது.

    👉 பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன் ஆயிடும். ஆனா, பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம் ஆகுமா?

    👉 என்னதான் எம்பிபிஎஸ் படிச்சு டாக்டர் ஆனாலும் கம்ப்யூட்டர்ல இருக்கற வைரஸ் -க்கு மாத்திரை கொடுக்க முடியுமா?
    ------------------------------------------------------------------------------------------------------------

    இவற்றை புரிந்து கொள்ளுங்கள் !!
    🌟 காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

    🌟 இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

    🌟 ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
    ------------------------------------------------------------------------------------------------------------

    வெற்றி தோல்வி !!
    🌟 வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
    வெற்றி சிரித்து மகிழ வைக்கும்,
    தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.!!
    ------------------------------------------------------------------------------------------------------------

    🌟 முயற்சிதான் வெற்றியின் முதற்படி என்றால்
    அந்த முதற்படியை அடைய
    நீ முன்னூறு முறை தோற்றாலும்
    முயற்சியை இழக்காதே.!!

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக