இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கருவுற்றிருக்கும்
பெண்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது. அதிக எடையுள்ள பொருட்களை
தூக்குவதால் கருச்சிதைவு மற்றும் கர்ப்பப்பை கீழிறங்கும் அபாயம் உள்ளது. இதனை
கவனத்தில் கொள்வது அவசியம்.
ஆரம்ப
கர்ப்பசிதைவை தடுக்க அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொண்டால்
கர்ப்பசிதைவை தடுக்கலாம்.
3.
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு
மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
கருவுற்றிருக்கும்
பெண்கள் அதிக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தினமும் சிறிதளவு
நடைப்பயிற்சி, நல்ல இசை, ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் முதலியவற்றை எடுத்து
கொள்ளுதல் அவசியம்.
கருவுற்றிருக்கும்
பெண்கள் எள் உருண்டை, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், கருஞ்சீரகம், வெல்லம் போன்ற
உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பம் தரும் பொருட்களை உண்பதால் கருச்சிதைவு
ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு கூறப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்படி
கேட்டு நடப்பது அவசியம்.
கருவுற்றிருக்கும்
காலத்தில் வாந்தி ஏற்படுவதுண்டு, அவற்றை தடுக்க, லவங்க பொடியை நீரில் கலந்து
அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில்
ஏற்படும் வாந்தி வராது. இதனால் உணவு உண்பதற்கு ஏதுவாகும்.
கர்ப்பிணி
பெண்கள் தினசரி இரண்டு நெல்லிக்காய் சாப்பிட வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு
டானிக்காக பயன்படுகிறது. மேலும் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால்
தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
கர்ப்பிணி
பெண்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால்
கைகால் வீக்கம் வராமல் பார்த்து கொள்ள முடியும். இதனுடன் கருவுற்ற தாய்மார்கள்
சாப்பிட சிறந்த பழம் மாம்பழம். இதனால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக