Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 நவம்பர், 2019

அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோவில் கரூர்

 Image result for அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோவில் கரூர்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது சிவத்தலமாக விளங்குகிறது. இது அன்பருக்கு அன்பராய் விளங்கும் ஆதி பரம்பொருளான அரனார் உறையும் அருட்தலங்களுள் ஒன்று. இத்தலம் கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம், குழித்தண்டலை எனவும் அழைக்கப்படுகின்றது.

தல வரலாறு :

இக்கோவிலானது வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் இரண்டு பிரகாரங்களை கொண்டது. இக்கோவிலை சுற்றி தேரோடும் வீதி உள்ளது. இக்கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன்புறம் ஒரு மண்டபம் இருக்கிறது. இக்கோவிலின் உட்புறத்தில் இரண்டாம் பிரகாரத்தின் கிழக்கில் வாகன மண்டபம், மடப்பள்ளி, கிணறு முதலியவைகளும் கால சன்னதியும், தென்கிழக்கு மூலையில் பிரம்ம தீர்த்தமும், வடமேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம் இருக்கிறது. இதனருகே அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன்புறத்தில் சுவாமி அம்பாளுக்குரிய கொடிமரம், பலிபீடங்கள் இருக்கின்றன.

இக்கோவிலின் உட்பிரகாரத்தில் வடகிழக்கில் நடராஜர் சன்னதியும், கருவூலம், நவக்கிரகங்களும், சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது. தெற்கில் ஜேஸ்டா தேவி, நால்வர் அறுபத்துமூவர், சேக்கிழார் சன்னதிகளம், மேற்கில் விஸ்வநாதர், விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், கஜலெட்சுமி சன்னதிகளும் இருக்கின்றன. நடுநாயகமாக மகாமண்டபம் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் கடம்பநாதர் வீற்றிருக்கிறார். மூலவர் பின்பக்கத்தில் சப்த கன்னியர்கள் இருக்கிறார்கள்.

தலப் பெருமை :

இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. இத்திருத்தலத்தின் மூர்த்தியான கடம்பவநாதரை திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபட்டிருக்கின்றனர். இத்திருத்தலம் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமையுடையது. வடநாட்டில் காசியினை போல் தென்னாட்டில் வடக்கு நோக்கியுள்ள சிறந்த தலம் என்பதால் தட்சிணாகாசி எனவும் அழைக்கப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் கடம்பர் கோவில், கடம்பவனேஸ்வரர் கோவில், ராஜேந்திரம் மத்யாகனேஸ்வரர் கோவில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், திரு மரகதீஸ்வரர் கோவில், கருப்பத்தூர் சிம்புரீஸ்வரர் கோவில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில், வெள்ளுர் திருக்காமேஸ்வரர் கோவில், பெட்டவாய்த்தலை மத்தியார்ஜூனேஸ்வரர் கோவில் ஆகிய 8 கோவில்களில் இருந்து சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுப்பது வேறு எங்கும் காண கிடைக்காத அரிய காட்சி ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக