Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 நவம்பர், 2019

இரண்டு தேவதைகள்..!

 Image result for இரண்டு தேவதைகள்..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஒரு முறை இரண்டு தேவதைகள் இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்த நீர்வீழ்ச்சியின் அழகை, வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பறவை, அந்த நீர்வீழ்ச்சியின் அருகே வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர்.

அதோ பார் ஒரு பறவை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்துள்ளது, என்றது ஒரு தேவதை. ஆமாம்... ஆமாம்... இந்த பறவை, பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும். அது நீராடுகிற காட்சியைக் காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு வகையில் நாம் இருவருமே யோகம் செய்தவர்களாக இருக்கிறோம் என்றது மற்றொரு தேவதை.

அந்த பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் நின்று கொண்டிருப்பதை கவனித்தபடியே, பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. அதே நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத் தரையை நோக்கிப் பாயத் தொடங்கியது. வேகமாக இழுப்பு விசையோடு பாய்ந்த நீர், அந்த பறவையையும் தள்ளிக்கொண்டு சென்றது.

இதை எதிர்பாராத அந்த பறவை, தடுமாறியபடி பாய்ந்தோடும் நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் திடுக்கிட்டனர். அதில் ஒரு தேவதை, அதோ, அந்த பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றது.

உடனே மற்றொரு தேவதை, வேண்டாம், அந்த பறவையை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றது. அதைக்கேட்ட மற்றொரு தேவதையோ, உன்னை விடவும் நான் குறைந்தவளில்லை. அந்த பறவையை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது. எனவே, இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்! என்று கூறியது.

உடனே மற்றொரு தேவதை, எனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை உனக்கு எப்படிக் கொடுப்பது? எனக்குக் கிடைத்த வாய்ப்பை நானே பயன்படுத்திக் கொள்கிறேன். நானே அந்த பறவையை காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் நீ காப்பாற்றும்படி விட்டுக் கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.

அந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தன. அங்கே தேவதைகளின் அருகே, அந்த பறவை நின்று கொண்டிருந்தது. தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை எப்போதோ இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து போராடியதால் தான் இப்போது உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தால் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவுக்கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். தேவதைகளே! ஏன் கவலைப்படுகிறீர்கள்? இனிமேலாவது உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த பறவை பறந்து சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக