இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருவோணம் :திருவோண நட்சத்திரத்தின் இராசி : மகரம்
திருவோண நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
திருவோண நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சனி
பொதுவான குணங்கள் :
பலனை எதிர்பாராமல் உதவக்கூடியவர்கள்.
மற்றவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தும் இயல்பு உடையவர்கள்.
சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள்.
சரியான நேரத்திற்கு உணவு உண்ண மாட்டார்கள்.
சேமிப்பில் நாட்டம் கொண்டு செயல்படுவார்கள்.
சுத்தமான ஆடை அணிவது இவர்களின் விருப்பமாகும்.
ஞானம் உடையவர்கள்.
நாடோடி வாழ்வில் விருப்பம் உள்ளவர்கள்.
வாசனைப் பொருட்களில் நாட்டம் உடையவர்கள்.
எதிலும் சிக்கனத்தை விரும்புபவர்கள்.
தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்கள்.
பெரியவர்களிடத்தில் மரியாதை கொண்டவர்கள்.
பொது விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்பவர்கள்.
நிலபுலன்களை கொண்டவர்கள்.
திருவோணம் முதல் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
கர்வம் உடையவர்கள்.
கல்வியில் நாட்டம் உடையவர்கள்.
தைரியசாலிகள்.
கலகத்தை விரும்புபவர்கள்.
சொத்து சேர்ப்பதில் வல்லவர்கள்.
உடல் பலவீனம் கொண்டவர்கள்.
திருவோணம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
பெரியோர்களை மதிக்கக்கூடியவர்கள்.
ஆன்மிக வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள்.
சிநேகம் இல்லாதவர்கள்.
இச்சைகள் (ஆசை) அதிகம் கொண்டவர்கள்.
யாரையும் நம்பாதவர்கள்.
திருவோணம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
பொதுத் தொண்டில் ஆர்வம் உடையவர்கள்.
கற்பனை திறன் மிகுந்தவர்கள்.
கோபமும், நல்ல குணமும் கொண்டவர்கள்.
கலைகளில் ஈடுபாடு உடையவர்கள்.
தர்மங்களில் விருப்பம் உடையவர்கள்.
திருவோணம் நான்காம் பாதம் :
இவர்களிடம் திருவோண நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
உடனடியாக கோபமும், சாந்த குணமும் உடையவர்கள்.
தான, தர்ம செயல்களால் புகழ் உடையவர்கள்.
செல்வ வளம் உடையவர்கள்.
விவசாய நுணுக்கங்களை அறிந்தவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக