Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

எறும்பு கேட்ட கேள்வி... மயங்கி விழுந்த யானை... என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------------------------
டாக்டர் : நான் ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிருக்கேன். ஆனா ஒரு ஈ, காக்கா கூட அங்க வரல.
பாபு : அதுங்கனாச்சும் உயிரோடு இருக்கட்டும் டாக்டர்.
டாக்டர் : 😏😏
-------------------------------------------------------
கணவன் : என்ன சமைச்சிருக்க? சாணி வறட்டி மாதிரி இருக்கு... நல்லாவே இல்ல...
மனைவி : கடவுளே... இவர் இன்னும் என்னவெல்லாம் சாப்பிட்டு பாத்துருக்காரோ தெரியலையே?...
கணவன் : 😳😳
-------------------------------------------------------
ஆசிரியர் : ஏன்டா  லேட்?
மாணவன் : வீட்டுல அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்ட சார்.
ஆசிரியர் : அவுங்க ரெண்டு பேருக்கும் சண்டனா, நீ எதுக்குடா லேட்டா வர?
மாணவன் : என்னோட ஒரு சூ(Shoe) அப்பாக்கிட்ட இருந்துச்சு... இன்னொரு சூ(Shoe) அம்மாக்கிட்ட இருந்துச்சு... அதான் சார்.
ஆசிரியர் : 😬😬
-------------------------------------------------------
இது எப்படி இருக்கு?...
-------------------------------------------------------
ஒரு எறும்பு சைக்கிள்ல வேகமா போயிட்டு இருந்துச்சாம்.
அப்போ குறுக்க ஒரு யானை திடீரென வந்துடுச்சாமா.
எறும்பு சைக்கிள்ல சடன் பிரேக் போட்டுட்டு யானையா பாத்து ஒரு வார்த்தை கேட்டுச்சாம்.
அதைக் கேட்டதும் யானை மயங்கி விழுந்துருச்சாம்.
எறும்பு என்ன கேட்டுச்சு தெரியுமா?
.
.
.
நீ சாக என்னோட வண்டிதான் கிடைச்சுதா.😂😂
-------------------------------------------------------
 சிந்தனை வரிகள்
-------------------------------------------------------
வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் வெறும் ஒரு சதவிகிதமே இருக்கிறது என்றாலும்,
அந்த ஒரு சதவிகிதப் பொறியிலிருந்தே உன்னால் பெரிய வெளிச்சத்தை உருவாக்க முடியும்.

⭐ கவலைகள் நாளைய துயரங்களை அழிப்பதில்லை...
இன்றைய வலிமையை அழித்துவிடும்.

⭐ சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
-------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------------------------
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

விளக்கம் :

மனம் செல்லும் வழிகளில் எல்லாம் செல்லவிடாமல், தீய வழிகளை ஒதுக்கி, நல்ல வழிகளை தேர்ந்தெடுத்து செல்வதே அறிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக