தெறிக்க வைக்கும் ஜோக்ஸ்...!!
அப்பா : டேய் உலகத்துலயே காசுதான்டா முக்கியம். காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன் : ஏன் கடன் வாங்கலாமே?...
அப்பா : 😳😳
---------------------------------------------------------------------------------------------
சந்தோஷமாக வாழ...!!
கணவனுக்கும், மனைவிக்கும் சண்டை வரும்போது,
மனைவி அமைதியாக இருந்தால்...
அந்த ஜென்மத்தில் அவனுடன் சந்தோஷமாக வாழலாம்...😝😝
கணவன் அமைதியாக இருந்தால்...
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அவளுடன் சந்தோஷமாக வாழலாம்...😂😂
---------------------------------------------------------------------------------------------
உண்மை, நேர்மை, உரிமை...!!
உண்மையாய் இருப்பதால்தான் அதிகம் காயப்படுகிறோம்...
நேர்மையாய் இருப்பதால்தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம்...
உரிமையாய் இருப்பதால்தான் அதிகம் கோபப்படுகிறோம்...!
---------------------------------------------------------------------------------------------
வெற்றி...!!
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தை பெறுவது என்று பொருள் அல்ல...
வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட, இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்...!
---------------------------------------------------------------------------------------------
ஹா... ஹா... இது
உண்மைதானே?..
வயிறு நிறைய சாப்பிடவிடாது
அதுதான் சுகர்...😁😁
---------------------------------------------------------------------------------------------
பத்து உபதேசங்கள்!
மடையனுடன் விவாதிக்காதே... மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறு இழைத்துவிடலாம்.
தோற்றவன் புன்னகைத்தால், வெற்றியாளன் வெற்றியின் சுவையை இழக்கிறான்.
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
தாய் மரணித்த அடுத்த கணம் மனிதன் முதுமையடைந்து விடுகிறான்.
இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே.
நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே.
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்... நீ முன்னால் இருக்கிறாய் என்று.
உனது மனைவியின் ரசனையில் நீ குறை காணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தேர்வு செய்தாள்.
நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக