Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 மே, 2020

முயற்சியா? முடிவா? உலகம் இதில் எதை எதிர்பார்க்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிக்க மட்டுமே..!!

கணவன் : ஹலோ... டார்லிங், இன்னைக்கு வீட்டுக்கு வரமுடியாது.
மனைவி : ஏன்?
கணவன் : கார்ல எவனோ ஸ்டியரிங், ஆக்ஸிலரேட்டார், க்ளட்ச், பிரேக் எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான்.
மனைவி : தண்ணியடிச்சிருக்கீங்களா?
கணவன் : கொஞ்சம் லைட்டா அடிச்சிருக்கேன்.
மனைவி : முதல்ல பின் சீட்ல இருந்து முன் சீட்ல போய் உட்கார்ந்து காரை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வாங்க..
கணவன் : 😬😬
----------------------------------------------------------------
சீலா : என் கணவர் இருக்கிற இடத்துல பணத்துக்கு குறைவே இருக்காது...
திவ்யா : நிஜமாவா? அப்படி எங்க இருக்காரு?
சீலா : ஏடிஎம் வாட்ச்மென்-ஆ இருக்காரு...
திவ்யா : 😝😝
----------------------------------------------------------------
ஆசிரியர் : நான் உடயளள எடுத்துக்கிட்டு இருக்கும்போது நீங்க பேசுனதுக்கு தண்டனையா உங்க பேர 200 தடவ எழுதுங்க...
மாணவன் : சார்... ரெண்டு பேருக்கும் ஒரே தண்டனையா தராம எனக்கு மட்டும் அதிகமா கொடுத்துருக்கீங்க...
ஆசிரியர் : ரெண்டு பேருக்கும் ஒரே தண்டனைய தான கொடுத்துருக்கேன்?...
மாணவன் : இல்லை சார்... அவன் பெயர் ரவி... என் பெயர் வேங்கட சுப்பிரமணிய கோபால கிருஷ்ணன்...
ஆசிரியர் : 😳😳
----------------------------------------------------------------
முயற்சியா? முடிவா?

சிறையில் வாழ்வதும்...
சிறகடித்து பறப்பதும்
உன் கையில்தான் உள்ளது..
முயற்சிகளை விட,
முடிவுகளை எதிர்பார்க்கும் உலகம் இது..
----------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் :

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுநி‌லைமை போற்றுவது சான்றோருக்கு அழகாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக