Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

இந்த போர் யுக்தி உங்களுக்கு தெரியுமா?... படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
மனைவி : நான் சிரிக்கும்போது என் கண்ணத்துல விழுற குழியை பாத்தா உங்களுக்கு என்ன தோணுது?
கணவன் : அவசரப்பட்டு படுகுழியில விழுந்துட்டோமோன்னு தோணுது...
மனைவி : 😡😡
-------------------------------------------------------------------------------------------
சீலா : ஏன்டா செல்லம் அழற.. அம்மா அடிச்சுட்டாங்களா? அப்பா கிட்ட சொல்லி அம்மாவ அடிக்க சொல்றேன்...
குட்டி பையன் : அப்பாதான் முதல்ல அடி வாங்கிக்கிட்டு இருந்தாரு... அத தடுக்கபோயி தான் அம்மா என்ன அடிச்சுட்டாங்க...
சீலா : 😂😂
-------------------------------------------------------------------------------------------
இப்படி இருங்கள்...!!
1. உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை - அவதூறு - அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

2. மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மகிழ்ச்சியாய் இருங்கள்.
-------------------------------------------------------------------------------------------
இன்றைய தத்துவம்... போர் யுக்தி...!!
ஒன்று - காளையை முன்னாடி நின்னு தாக்கக்கூடாது...😋

இரண்டு - கழுதைய பின்னால நின்னு தாக்கக்கூடாது...😌

மூன்று - கோபமா இருக்க மனைவிய எந்தக்கோணத்தில் இருந்தும் தாக்கக்கூடாது.😝
-------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்..!
🚩 சீரான சாலைகளைக் கொண்டு...
சிறப்பான வாகன ஓட்டுநர்கள் அமைந்து விடுவதில்லை.

🚩 அமைதியான கடலின் நிலையை கொண்டு...
அறிவான கப்பலோட்டிகள் வரப்போவதில்லை.

🚩 தெளிவான வானத்தை வைத்து...
திறமையான விமானிகள் கிடைத்து விடுவதில்லை.

🚩 எந்தவொரு பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை கொண்டு...
உறுதியான மனம் படைத்தவர் உருவாக போவதில்லை.

🚩 மலையின் உச்சிக்கு சென்றடைய
மிருதுவானஃமென்மையான பாதை உதவாது.

🚩 சீரானஃசுமூகமான வாழ்க்கை...
வெற்றி பெற்ற வாழ்க்கையாக கருதப்படாது.

🚩 அனுபவம் என்பது எதையும் மாற்றி அமைக்கும்...
பயிற்சி என்பது எதையும் பக்குவப்படுத்தும்...
ஈடுபாடு என்பது எதையும் திருப்தியடைய செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக