Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஏப்ரல், 2020

நினைத்தது நடக்க... இதை செய்யுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்...!!

மதுமிதா : கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்ட சண்டை போட்டுருக்கீங்களாமா?
சீலா : ஆமா அந்த சண்டையில வீட்டை விட்டுட்டு போனவருதான்... மறுபடியும் வரவே இல்ல...
மதுமிதா : 😂😂
---------------------------------------------------------------------
மதன் : அவ‌ர் ப‌ல் டா‌க்ட‌‌ர் இ‌ல்ல... போ‌லி டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?
கார்த்தி : ப‌ல் ஆடுது‌ன்னு இ‌ந்த டா‌க்ட‌ர்கி‌ட்ட சொ‌ன்னது‌க்கு, பரதநா‌ட்டியமா? கு‌ச்சு‌ப்புடியா‌ன்னு? கே‌க்‌குறா‌ரு.
மதன் : 😝😝
---------------------------------------------------------------------
அருண் : எதுக்கு பையன போட்டு இப்படி அடிக்கிறீங்க?
குமார் : டநவவநச-ஐ போஸ்ட் பாக்ஸ்ல போட்டு வர சொன்னா... போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்...
அருண் : 😬😬
---------------------------------------------------------------------சிறந்த வரிகள்...!!

கடவுள் நீ கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல்
கெட்டதை தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்...
இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்...
இல்லாதவற்றை நினைத்து கவலைப்படாதே...
உன்னை படைத்த கடவுளுக்கு தெரியும்...
உனக்கு எந்த நேரத்தில், எது தேவை என்று...
கடவுள் மேல் நம்பிக்கையுடன் பொறுமையாக இரு...
நினைத்தது நிச்சயம் நடக்கும்...
நல்லதே நடக்கும்...!!
---------------------------------------------------------------------
விடுகதைகள்...!!

1. எவர் கையிலும் சிக்காத கல். எங்கும் விற்காத கல். அது என்ன?

2. கோவிலைச் சுற்றிக் கறுப்பு. கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன?

3. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?

4. கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அது என்ன?

5. கொதிக்கும் கிணற்றில் குதித்து குண்டாகி வருவான். அவன் யார்?

விடைகள் :

1. விக்கல்.

2. சோற்றுப்பானை-சோறு.

3. ஈசல்.

4. படகு.

5. பூரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக