>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 10 ஜூன், 2020

    மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டிய முக்கிய அம்சங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க மட்டுமே...!

    (வாட்சப் மெசேஜில்)
    மனைவி : ஆபீஸ்ல இருந்து வரும்போது காய்கறி வாங்க மறந்துடாதீங்க... அப்புறம் சவிதா உங்களுக்கு ஹாய் சொல்ல சொன்னா...
    கணவன் : எந்த சவிதா?
    மனைவி : ஒரு சவிதாவும் இல்ல... மெசேஜ் படிக்கிறீங்களா இல்லையான்னு செக் பண்ணி பாத்தேன்😂😂.
    கணவன் : நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை?
    மனைவி : எங்க இருக்கீங்க?
    கணவன் : காய்கறி மார்க்கெட்ல.
    மனைவி : நான் வர்றேன். அங்கயே இருங்க.
    பத்து நிமிஷம் கழிச்சு
    மனைவி : நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?
    கணவன் : நான் ஆபீஸ்ல இருக்கேன்... மார்க்கெட்-க்கு வந்துட்டீல்ல... வேணுங்குற காய்கறிய நீயே வாங்கிக்கோ... யாருக்கிட்ட...😂😂
    மனைவி : 😏😏
    ----------------------------------------------------------------------
                    சிறந்த வரிகள்..!
    ----------------------------------------------------------------------
    🌟 சிந்தனையும், சிரிப்பும் தான் மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டிய முக்கிய அம்சங்கள். 

    🌟 பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பவனைவிட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன்.

    🌟 சிலருடைய சிந்தனைகளில் உலக வரலாறு எழுச்சிப் பெற்றிருக்கிறது. எனவேதான் 'துப்பாக்கி முனையைவிட பேனா முனை வலிமையானது" என்கிறார்கள்.
    ----------------------------------------------------------------------
             இது உண்மை தானே!!
    ----------------------------------------------------------------------
    பூச்சாண்டிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு 
    குழந்தைகளுக்கு சோறு 
    ஊட்டுவதில் முன்னுக்கு வந்துவிட்டது செல்போன்...
    ----------------------------------------------------------------------
            படித்ததில் பிடித்தது...!!
    ----------------------------------------------------------------------
    பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்.

    யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.

    யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு.

    யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு.

    சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்.

    உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்..

    உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்.

    உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்.

    ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்.

    எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கு அருகில் இருக்கட்டும்.

    இயற்கையும், இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக