Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 10 ஜூன், 2020

12-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

நவகிரகங்களில் முழு சுபகிரகம் என போற்றி வணங்கப்படுபவர் குருபகவான். இவர் பார்வை பட்டாலே, பட்ட மரம் துளிர்க்கும். இவர் ஒரு ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலோ, திரிகோண வீடுகளில் அமர்ந்துவிட்டாலோ, அந்த ஜாதகருக்கு பணம் - பதவிக்கு எந்த குறையும் இருக்காது.

பட்டி தொட்டியில் பிறந்தவராக இருந்தாலும், பட்டணத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஜாதகத்தில் குரு நல்ல விதத்தில் அமர்ந்தால்தான் படிப்பு, பட்டம், பதவி என படிப்படியாக உயர முடியும்.

நவகிரகங்களில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் குருபகவான் ஆவார். சப்த ரிஷிகளில் ஆங்கிரச முனிவரின் மகன் குரு என்றும், பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைக்கப்படுகிறார். 

லக்னத்திற்கு 12-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பண விரயங்கள் உண்டாகும்.

12ல் குரு இருந்தால் என்ன பலன்?

👉 வீண் செலவுகள் ஏற்படும்.

👉 கனவுகள் அதிகம் உடையவர்கள். 

👉 சிறப்பான கண் பார்வை உடையவர்கள்.

👉 பண வரவில் இடையூறு உண்டாகலாம்.

👉 நிம்மதியான இல்லற வாழ்வு உண்டாகும்.

👉 வாழ்க்கை பற்றிய புரிதலை உடையவர்கள்.

👉 விசித்திரமான மனப்பான்மை கொண்டவர்கள்.

👉 ஏற்ற, இறக்கமான சூழ்நிலையை கொண்டவர்கள்.

👉 அடிக்கடி மாற்றமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.

👉 சுபகாரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். 

👉 ஆன்மிகம் தொடர்பான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக