திங்கள், 30 மார்ச், 2020

இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க மட்டுமே...!!

கார்த்திகா : என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துக்குவேன்.
சந்தோஷ் : சந்தோஷம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
கார்த்திகா : என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!
சந்தோஷ் : 😂😂
------------------------------------------------------------
பாபு : என் மனைவிக்கு கோபம் வந்தா அவ அம்மா வீட்டுக்கு போயிடுவா...
ராம் : நீங்க என்ன பண்ணுவீங்க?...
பாபு : கோபம் வர்ற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்... வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குபவனே திறமைசாலி...
ராம் : 😳😳
------------------------------------------------------------
காவலர் : யோவ்... இங்க வா... ஏன் சைக்கிளை இங்க படுக்க வெச்சிட்டு போற?...
ராஜா : சார் இங்க சைக்கிள நிறுத்தக்கூடாதுன்னு போர்டு வெச்சுருக்கீங்களே... அதான் படுக்க வெச்சிட்டு போறேன்...
காவலர் : 😩😩
------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

விளக்கம் :

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது. துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.
------------------------------------------------------------
விடுகதைகள் !!
1. கொண்டையில பூ இருக்கு, வாடை இல்ல...
கையத்தட்டுன்னா... கை.. வலிக்கல..
கிண்டிவிட்ட வெள்ளாம வரலை - அது என்ன?

2. அட்டைக்கு ஆயிரம் கண்ணு,
முட்டைக்கு மூன்று கண்ணு - அது என்ன?

விடைகள் :

1. கொண்டை சேவல்.

2. கட்டிலும், தேங்காயும்.
நிதர்சனமான உண்மை...!!
பல பேர் வசயடை பாத்து ஒதுக்கிச் சென்ற ஆடைகள்தான்...
மற்ற வாடிக்கையாளர்களின் பார்வையில் புத்தாடை ஆகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்