இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.
மருத்துவர்கள், காவல்துறையிர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்
அதேபோல் மருத்துவர்கள், காவல்துறையிர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதால் வெளியில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து சேவையாற்ற அஜித்திடம் பயிற்சி பெற்ற இளைஞர் குழு தமிழக அரசுக்கு உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிள் தெளிக்க போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரோன் பயன்படுத்தி கிருமி நாசினி
இதையடுத்து கிருமி நாசினிகளை ட்ரோன் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கல்லூரி மாணவர்கள் பெருமளவு அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். அப்படி உதவி செய்யும் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நடிகர் அஜித் முன்னதாகவே பயிற்சி அளித்துள்ளார்.
டீம் தக்க்ஷா
நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய டீம் தக்க்ஷா தான் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரசுடன் இணைந்து செய்து வருகிறது. இந்த டீம் தக்க்ஷா ஆனது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யுஏவி சவால்களை பங்கேற்று கடந்த காலங்களில் பல விருதுகளை பெற்றுள்ளது.
ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினிகொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையின் முக்கிய இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக