Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 மார்ச், 2020

Google-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்! தேடினால் சிக்கல் தான்!







கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் வலைத்தளத்தில் தேடவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஏன் தேடக் கூடாது என்ற உங்களின் முதல் கேள்விக்கான பதில், பாதுகாப்பான தகவல் அல்லது உங்களுக்குத் தேவையான கொரோனா உதவி தகவல் என்ற பெயரில் ஹேக்கர்கள் தங்கள் வலையை விரித்துள்ளனர். கொரோனாவிடமிருந்து தப்பிக்க நினைத்து இவர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
செக்பாயிண்ட் என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொடர்பான டொமைன்களின் எண்ணிக்கை 50% உயர்ந்துள்ளது. உலகளவில் சுமார் 4,000-க்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொடர்பான வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 3 சதவீதத்திற்கும் மேலான தளங்கள் மால்வேர்கள் தளங்கள் என்றும் மற்றும் 5% சந்தேகத்திற்குரிய தளங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகிளில் தேடவே கூடாத கொரோனா விஷயங்கள்
தற்போதைய சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக ஹேக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே கொரோனா குறித்து தகவல்களை நீங்கள் வலைத்தளத்தில் சேகரிக்க நினைத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வலைத்தளத்தில் கொரோனா குறித்து நீங்கள் செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
 கொரோனா வைரஸ் ஆப்ஸ் (Coronavirus apps)
கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த நேரத்தில் லைவ் அப்டேட் செயலி என்று கூறி உங்களை ஹேக்கர்கள் அவர்களின் வலையில் எளிதாகச் சிக்கவைத்துவிடுவார்கள். முதலில் உலக சுகாதார மையமே இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒரு பயன்பாட்டுச் செயலியை மக்களுக்காக வெளியிடவில்லை என்பதே உண்மை. இப்படி இருக்கும்பொழுது கொரோனா பெயரில் இருக்கும் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
கொரோனா பெயரில் ransomware வலை
கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் 'கோவிட்லாக்' என்ற ஆப், பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ransomware மால்வேரை நிறுவுகிறது. ransomware உங்கள் போனில் நிறுவப்பட்டுவிட்டால் அதில் கேட்கப்படும் தொகையை நீங்கள் செலுத்திய பிறகே உங்கள் போனை நீங்கள் பயன்படுத்த முடியும். இதன்படி இப்பொழுது $100 கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்த ஆப் கட்டாயப்படுத்துகிறது. ஆகையால் தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

காஸ்பர்ஸ்கியின் அறிக்கைப்படி உங்களுக்கு உறுதியாகத் தெரியாத ஒரு மூலத்திலிருந்தும், கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு மின்னஞ்சலையும் திறக்க வேண்டாம். பயனர்களின் ப்ரவுஸர் டேட்டா மற்றும் பிற முக்கிய தகவல்களைத் திருட ஹேக்கர்கள் உருவாக்கிய போலி மின்னஞ்சல்கள் தான் இவை. கொரோனா வைரஸ் பெயரில் உங்களுக்கு வரும் இமெயில்களை திறக்க வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் டிராக்கர்ஸ் (Coronavirus trackers)
கொரோனா வைரஸ் சார்ந்த அப்டேட்களை பெற விரும்பி கொரோனா வைரஸ் டிராக்கர்களை நீங்கள் பயன்படுத்தினால் உங்களின் பெயர், பாஸ்வோர்டு, கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் உங்களின் பிரவுஸர் சேமிப்பு தகவல் போன்ற அனைத்து விபரங்களையும் ஹேக்கர்கள் திருட வாய்ப்புள்ளது என்பதை அங்கு உணர்ந்துக்கொள்ளுங்கள். WHO, மைக்ரோசாப்ட் டிராக்கர் தளம் அல்லது WHO வாட்ஸ்அப் சாட்பாக்ஸ் மூலம் பாதுகாப்பாக டிராக்கிங் செய்கிறது.
கொரோனா வைரஸ் டெஸ்டிங் கிட்ஸ் (Coronavirus testing kits)
கொரோனா வைரஸ் அறிகுறியை டெஸ்டிங் கிட்ஸ் வைத்துச் சரியாகக் கண்டுபிடிக்கமுடியாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். COVID-19 சோதனையை மேற்கொள்ள நீண்ட நேரமும், சரியான மருத்துவ மேற்பார்வையும் கட்டாயம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் கொரோனா வைரஸ் டெஸ்டிங் கிட்களை தேடி ஏமாறாதீர்கள். கொரோனா அறிகுறி இருந்தால் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தகவல் தெரிவியுங்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (Coronavirus vaccine)
கொரோனா வைரசிற்கான தடுப்பூசி என்று இதுவரை எதுவும் உருவாக்கப்படவில்லை. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி என்று வலைத்தளத்தில் பரவும் போலி செய்தியை நம்பி அந்த மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்காதீர்கள். இவை முற்றிலுமாக வதந்தியே என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். இதை ஆன்லைன் இல் விற்பனை செய்யும் வலைத்தளங்கள் மற்றும் மருந்துகள் அனைத்தும் போலியானவை என்பதே உண்மை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக