ஹா... ஹா.. சிரிக்க... சிந்திக்க...
போனோட பேட்டரி சார்ஜ் முடியும்போது காட்டும் சுறுசுறுப்பை...
காலையில் தூங்கி எழுந்ததும் காட்டினால் வாழ்க்கையில் எங்கேயோ போய்விடலாம்..
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது... குட்டிக்கதை...!!
படித்ததில் பிடித்தது... குட்டிக்கதை...!!
ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார்.
அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார்.
அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது.
இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார்.
பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார்.
நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம்.
வாழ்க்கையில் நமக்கான வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக