இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடை
வீதியில் நடந்து போகும்போது கணவனிடம் பேச்சுக்கொடுக்கிறாள் மனைவி.
மனைவி
: மாமா நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு
இருக்கும்?
கணவன்
: சட்டுன்னு யோசிக்காமல்... கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!
மனைவி
: அதோ... நமக்கு எதிர்ல டி-ஷர்ட் போட்டு ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?
கணவன்
: என்னா... மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது.... ஆமா, எதுக்கு அவங்க வயசை
எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி
: அது ஒன்னும் இல்ல மாமா... கண் பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்னு சொன்னீங்களே..!
ஆனா... இந்த மாதிரி பொண்ணுங்க யாராவது போகும்போது கண்ணை மூடாம பாக்குறீங்களே...
இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணேன்..
கணவன்
: மைண்ட் வாய்ஸ்சில்... இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதோ?
----------------------------------------------------------------------------------------------------------------
அம்மா
: ஏன்டா நல்ல சட்டைய கிழிச்சி அத துவச்சிக்கிட்டு இருக்க?
பையன்
: எங்க சார்தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.
அம்மா
: 😡😡
ஆசிரியர்
: ஏன்... வகுப்பிற்கு கலர் கலரா நூல் வாங்கிட்டு வந்து வச்சிருக்க?
மாணவன்
: நீங்கதானே சார் சொன்னீங்க... உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு
பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
ஆசிரியர்
: 😩😩
----------------------------------------------------------------------------------------------------------------
அழகான வரிகள் !!
இவ்வுலகில்
வாழ கற்றுக் கொண்டதை விட
வலிகளை
மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்......!
துரோகிகளிடம்
'கோபம்" இருக்காது..
கோபப்படுபவர்களிடம்
'துரோகம்" நிச்சயமாக இருக்காது..
தன்னை
நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்...
எவரும்
நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..
----------------------------------------------------------------------------------------------------------------
24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம்.
என்ன கத்துச்சு?
ஒரு
குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல டபக்குன்னு ஒரு
யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம்.
ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா
கத்துச்சாம். என்ன கத்துச்சு?
விடை
:
டேய்
மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே.😂😂😂😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக