இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகளுக்கு
விருப்பமான பாதுஷாவை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்பொழுது ருசியான பாதுஷாவை வீட்டிலேயே எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா
- 2 கப்
தயிர்
- 1 கப்
நெய்
- 4 தேக்கரண்டி
சமையல்
சோடா - சிறிதளவு
சர்க்கரை
- 2 கப்
தண்ணீர்
- 2 கப்
ஏலக்காய்
பொடி - சிறிதளவு
எண்ணெய்
- பொரிக்கத் தேவையான அளவு
முந்திரி
அல்லது பாதாம் - 6
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர், நெய், சமையல்
சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் கலந்து
வைத்துள்ள தயிரைச் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடம் மாவை ஊற
வைத்துக்கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி
சர்க்கரையைச் சேர்த்து, இளஞ்சூட்டில் பாகு நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்
அடுப்பை அணைத்து ஏலக்காய் பொடியை பாகுடன் சேர்க்கவும். பின் ஊறவைத்த மாவை சிறிது
சிறிதாக எடுத்து உருட்டி ஓரளவுக்குத் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
தட்டி வைத்தள்ள பாதுஷாக்களை எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து,
பாதுஷாக்களை பொரிய விடவும்.
பாதுஷாக்கள் பொன்னிறமாக மாறியவுடன், வெளியே
எடுத்து 2-3 நிமிடங்களுக்கு ஆற வைத்து, அதை செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில்
போடவும்.
பின்
அதனை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு அதன் மீது முந்திரி அல்லது பாதாமை
தூவினால் ஸ்வீட் பாதுஷா தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக