இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்தியாவில்
ஆதார் அட்டை அறிமுகப்படுத்தியதில் இருந்தே பல சர்ச்சைகள் தொடர்ந்து இருந்து கொண்டே
தான் இருக்கின்றன. பல திருத்தங்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. இது தவிர
பல இடங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டும் வருகிறது.
முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் எண் ஏற்கனவே
வங்கிகளில் இணைப்பு, பான் எண்ணுடன் இணைப்பு, வருமான வரி தாக்கலில் இணைப்பு
உள்ளிட்ட பல செயல்களுக்கு முக்கியத்துவமாக்கப்பட்ட நிலையில், தற்போது சொத்துகளுடன்
இணைக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
இதன் படி போலி
ஆவணங்கள் மூலம் நிலங்கள் அபகரிக்கப்படுவது, கறுப்பு பணத்தை ஒழிக்க முடியும்
என்றும் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
அரசல் புரசலாக பேச்சு
இது இன்று
நேற்றல்ல, கடந்த 2 -3 வருடங்களாகவே ஆதாரை சொத்துடன் இணைப்பது பற்றிய பேச்சுகள்
இருந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது இது குறித்தான இறுதி முடிவு
எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது விரைவில் அமலுக்கு வரலாம் என்றும்
கருதப்படுகிறது. இது பற்றிய கருத்துகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்த
நிலையில், தற்போது இது பற்றிய சத்தம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதிரடி நடவடிக்கை
இவ்வாறு
அரசு ஆதாரை ஊக்குவிப்பதன் மூலம் கறுப்பு பணத்தை ஊக்குவிப்பதை தடுக்க முடியும். பண
மோசடிக்கு எதிரான மற்றொரு பெரிய அறுவை சிகிச்சையாக இருக்கும் என்றும்
கருதப்படுகிறது. கடந்த 2016ல் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, முதல் அறுவை
சிகிச்சையாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும், இரண்டாவதாக இப்படி ஒரு
நடவடிக்கையை கொண்டு வந்தால் நிச்சம் இது அரசுக்கு கைகொடுக்கலாம் என்றும்
கருதப்படுகிறது.
தொடர்ந்து கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை
கடந்த
2014ல் பிரதமர் மோடி முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கறுப்பு பணத்தை
கணக்கில் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுவும் விரைவில்
அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்ற யூகமே நிலவி வருகிறது. ஒரு புறம் ரியல் எஸ்டேட்
துறையில் இதன் தாக்கம் இருந்தாலும், நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு முக்கிய
காரணமாக இது அமைந்தது. எனினும் மறுபுறம் கறுப்பு பணத்தை இது
கட்டுப்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் மாற்றம் வரலாம்
அரசு அடுத்த
2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்
நிலையில், இது வரும் காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு மாற்றத்தினை கொண்டு
வரலாம். இந்த நிலையில் ஆதார் சொத்துக்களுடன் இணைக்க ஒரு சட்டம் கொண்டு வருவது
இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த அறிக்கையில்
கூறப்பட்டது போல் இந்த ஆதார் நடவடிக்கையானது செயல்பாட்டுக்கு வந்தால், பினாமி
முறையிலான சொத்துகளை இது களையெடுக்கும் என்றும் கருதப்படுகிறது.
மாற்றம் இருக்கலாம்
எல்லாவற்றையும்
விட சொத்துகளின் அதிகப்படியான விலையேற்றம் தடுக்கப்படும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த தீவிர நடவடிக்கையால், சொத்துகள் கணக்கில்
வருவதும் அதிகரிக்கும். மேலும் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சத்தால்
சொத்துக்களை மாற்றுவதற்காக ஆரம்ப அவசரமும் இருக்கலாம்.
முதலீடு அதிகரிக்கும்
vஇது
குறித்து NAREDCO மஹாராஷ்டிராவின் தலைவர் ராஜன் பண்டேல்கர் சமிபத்தில் ஒர்
அறிக்கையில் கூறியிருந்தார். அதில் ஆதார் சொத்து உரிமையுடன் இனைப்பது கறுப்பு
பணத்தை களைவதற்கு பயன்படும். மேலும் இது ரியல் எஸ்டேட் துறையில் உள்ள மோசடிகளை
களைய வழிவகுக்கும் என்றும் கூறியது.மேலும் பினாமி மூலம் சொத்து வாங்குபவர்கள் வேறு
திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கலாம். மேலும் இதனால் வீட்டு விலைகளையும்
கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
சொத்து பரிவர்த்தனையை எளிதாக்கும்
இது
எல்லாவற்றையும் விட இது பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கும்ம் நிதி வழங்குவதற்கும்
உதவும் என்றும் கூறப்படுகிறது. மேம்பட்ட வெளிப்படை தன்மை காரணமாக வீட்டுக் கடன்,
சொத்து பரிவர்த்தனை, விற்பனை, அல்லது சொத்து வாங்குவது போன்ற வீட்டுக் கொள்முதல்
தொடர்பான நடைமுறைக்கு ஆதார் சொத்து இணைப்பு சில எளிமைகளை வழங்கும் என்றும்
கூறப்படுகிறது.
நம்பகத் தன்மையை அதிகரிக்கும்
மேலும் இது
வரவேற்க தக்க ஒரு விஷயமாகும். இது சொத்து வாங்குபவர்களின் நம்பகத் தன்மையை
அதிகரிக்கும். மேலும் இதனால் வீடு வாங்குபவர்களும் பயனடைவார்கள். மேலும் இது
சொத்து வாங்குபவர்களின் பரிவர்த்தனைகளில் நம்பகத் தன்மையை வழங்குகிறது என்றும்,
பாதுகாப்பு உணர்வையும் தரும். என்றும் கூறப்படுகிறது.
இது வரவேற்கதக்க விஷயம் தான்
எது
எப்படியோ? இப்படி விஷயம் நடைமுறைக்கு வருமா? இல்லையா? என இது வரை அரசிடம் இருந்து
எந்தவொரு அறிக்கையும் வரவில்லை. ஆனால் இப்படி திட்டம் வந்தால் மிக வரவேற்க தக்கதே.
இதனால் நடுத்தர மக்கள் மிகப் பயன்பெறுவர். மேலும் நில விலைகளும் குறையும்.
பாதுகாப்பும் இருக்கும். போலியாக ஆவணங்கள் மூலம் அபகரிப்பதும் தடைபடும். குறிப்பாக
கறுப்பு பணம் ஒழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக