இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கலை
ரசனை மிகுந்த, எதையும் நுட்பத்துடன் சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே...!
இதுவரை
உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இனி 8ஆம் இடமான
அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்து வாழ்க்கையை புதிய பரிணாமத்திற்கு அழைத்து செல்வார்.
சனி
தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக
குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார். புதிய
நபர்களின் அறிமுகமும், அவர்களின் ஆலோசனைகளும் உங்களின் வாழ்க்கையில் புதுவிதமான மாற்றங்களை
ஏற்படுத்தும் காலக்கட்டமாகும்.
தொழிலில்
சற்று அதிக ஈடுபாட்டை செலுத்துவதன் மூலம் தொழில் நல்ல நிலைக்கு உயரும். குடும்பத்தின்
பொருளாதார நிலை மந்தநிலையுடன் காணப்படும். தந்தையின் ஆரோக்கியம் சீரடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம்
தொடர்பான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதன் மூலம் அலைச்சல்கள் உண்டானாலும் இறுதியில்
தாங்கள் விரும்பிய வண்ணம் அனைத்தும் கைகூடும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள்
குறையும்.
விவசாயிகளுக்கு :
நீர்பாசன
வசதிகள் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சிறிய அலைச்சலுக்கு பின் மனை
வாங்குவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். மற்றவர்களின் வார்த்தைகளை நன்கு யோசித்த பின்பு
நம்புவது உத்தமம் ஆகும்.
பெண்களுக்கு :
குடும்ப
உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. சில இடங்களில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல்
விட்டுக்கொடுத்து போகும் காரியங்களில் வெற்றி கொடியை நாட்டுவீர்கள். தீர்ப்பு தங்களுக்கு
சாதகமாக அமைய வேண்டுமெனில் வழக்குகளை தள்ளிப்போடுவது சிறப்பு.
மாணவர்களுக்கு :
ஆசிரியர்களின்
மேலான ஆலோசனையை பின்பற்றுவதால் முன்னேற்றமான சூழல் அமையும். உயர்கல்வி தொடர்பான அலைச்சல்கள்
ஏற்படும். போட்டித்தேர்வுகளில் ஈடுபடுபவர்கள் தங்களது பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை
படிப்பதன் மூலம் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி
தொடர்பான உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிக்கவும். பிரச்சாரம் மேற்கொள்ளும்போது
உணவுகளில் கட்டுப்பாடு தேவை. தொண்டர்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகளில் கவனம் தேவை.
தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்கவும்.
வியாபாரிகளுக்கு :
பூர்வீக
சொத்துக்களில் இருக்கும் ஏதேனும் ஒரு பங்கு தங்களின் தொழிலுக்கு உதவிக்கரம் நீட்டும்.
வியாபாரத்தில் புதிய எண்ணங்களை செயல்படுத்தும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு
எடுக்கவும். சிந்தனைகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி தெளிவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
தடைபட்டு
வந்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். செய்யும் முயற்சிக்கேற்ப மாற்றமான சூழலும், அதற்கான
முன்னேற்றமும் மகிழ்ச்சியை அளிக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரம் சில நேரங்களில் காலம்
கடந்து கிடைக்கும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும்
ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக