இது சிரிப்பதற்கான நேரம்...!!
காவலர் : போன்ல உங்களுக்கு கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆப்ரேஷன் பண்ண பேஷண்ட்டுகள்ல ஒருத்தரா இருக்குமோ?
டாக்டர் : எனக்கு தெரிஞ்சு, அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே!
காவலர் : 😂😂
------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : நரகாசுரனை கொன்னது யாரு?
மாணவன் : அதை போலீஸ் பாத்துக்குவாங்க சார். நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்.
ஆசிரியர் : 😡😡
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவங்கள்...!!
👉 பல துன்பங்களையும், சின்ன சின்ன அவமானங்களையும் சந்தித்தால்தான் வாழ்க்கையில் உயர முடியும்...
👉 சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.
👉 இது என்னுடையது என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருப்பதில்லை. எதுவும் என்னுடையது அல்ல என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக்கொடுக்க நம்மிடம் எதுவும் இருப்பதில்லை.
------------------------------------------------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
விளக்கம் :
ஒருவன் அறத்தை போற்றி கூறாதவனாய் அறமல்லாதவற்றை செய்தாலும், மற்றவனைப் பற்றி புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
------------------------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன?
2. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி. அவள் யார்?
3. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு. அது என்ன?
4. உங்களுக்கு சொந்தமான ஒன்றை உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள். அது என்ன?
விடைகள் :
1. கண்.
2. முட்டை.
3. அடுப்புக்கரி.
4. பெயர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக