எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அதில் நன்கு சிந்தித்து செயல்படும் மீன ராசி அன்பர்களே..!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மூத்த சகோதரர்கள் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையும், உயர்வும் உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளில் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும். வாகன பயணங்களின் மூலம் வெளிவட்டார மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் வெளியே பயணங்கள் மேற்கொள்ளும்போது பெற்றோர்களிடம் அனுமதி பெற்று செல்வது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய வாழ்க்கையை சில போராட்டங்களுக்கு இடையில் எதிர்பார்த்தபடி அமைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்திற்கு செல்லும் பெண்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
படித்து முடித்த மாணவர்களுக்கு கல்விக்கேற்ற உத்தியோக வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணி மாற்றமும், இடமாற்றமும் நிகழலாம்.
வியாபாரிகளுக்கு :
வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அவ்வப்போது சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதுவிதமான தொழில்நுட்ப உதவிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் மற்றும் சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் ஆதரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்டு வந்த மனக்கசப்புகள் குறையும். புதிய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளுக்கு சக தோழர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல்களில் எதிர்பார்த்த லாபம் சற்று குறைவாகவே கிடைக்கும். புதிய ரக பயிர்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். அக்கம்பக்கம் நிலம் கொண்டவர்களின் ஆதரவுகளும், ஆலோசனைகளும் மனதைரியத்தையும், ஒருவிதமான புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணங்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வயதில் மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் காலக்கட்டமாகும்.
பரிகாரம் :
ஞாயிற்றுக்கிழமைதோறும் காலபைரவரை மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாக சாற்றி வழிபட்டு இனிப்பு வழங்கி வர உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக