>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

    நாமும் காகிதம்தான்... குப்பையாவதும், கடவுளாவதும் நம் கையில்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------------------------
    கலக்கலான ஜோக்ஸ்...!!
    ----------------------------------------------------------------------------
    நோயாளி : டாக்டர் மயக்க ஊசி போடாம ஏன் ஆப்ரேஷன் செய்றீங்க?... எனக்கு பயங்கரமா வலிக்குது.
    டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்கோங்க. கொஞ்ச நேரத்துலதான் 'எல்லாமே" முடிஞ்சுடும்.
    நோயாளி : 😳😳
    ----------------------------------------------------------------------------
    சிரிப்பதற்கான நேரம்...!
    ----------------------------------------------------------------------------
    ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றி கொன்ற வழக்கில் பிடிப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்.

    நீதிபதி : எப்படி Accident ஆச்சு?
    குற்றவாளி : ஒரே இருட்டு... நான் 80கி.மீ வேகத்தில் வந்தபோதுதான் எனக்கு தெரிந்தது.. லாரியில் பிரேக் பிடிக்கவில்லை என்று... நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் வண்டியை என்னால் நிறுத்த முடியவில்லை...
    நீதிபதி : அப்புறம்...?
    குற்றவாளி : எனக்கு எதிரே வீதியில் ஒரு பக்கம் 2 பேர் நடந்து போனதையும், மற்றொரு பக்கம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன்.. நீங்களே சொல்லுங்க சார்... நான் என்ன செய்திருக்கணும்?
    நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேல தான் மோதியிருக்கணும்.
    குற்றவாளி : அப்படிதான் சார் நானும் நினைச்சு செஞ்சேன்...
    நீதிபதி : அப்படின்னா... 2 பேர்தான செத்துருக்கணும்.. எப்படி 50 பேர் செத்தாங்க?...
    குற்றவாளி : அப்படி கேளுங்க... நான் அந்த 2 பேர் மேல மோத போனபோது ஒருத்தன் மட்டும் கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். விடுவனா நான்... அதனாலதான் இப்படி ஆகிருச்சு சார்...
    நீதிபதி : 😧😧
    ----------------------------------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!
    ----------------------------------------------------------------------------
    எதையும் எதிர்கொள்வேன் என்ற நம்பிக்கை வாழ்க்கையில் இருந்தால் போதும்...
    அதுவே வெற்றியை கொடுக்கும்...
    வெற்றியும், தோல்வியும் இரு படிகளே...
    ஒன்றில் உன்னை நீ உணர்ந்து கொள்வாய்...
    மற்றொன்றில் நீ உன்னை திருத்திக் கொள்வாய்...
    ----------------------------------------------------------------------------
    காகிதம்...!!
    ----------------------------------------------------------------------------
    காகிதத்தை கசக்கும்போது குப்பையாய் பார்க்கிறோம்...
    காசாக்கும்போது கடவுளாய் பார்க்கிறோம்...
    நாமும் காகிதம்தான்...
    குப்பையாவதும், கடவுளாவதும் நம் தரத்தை பொறுத்துதான்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக