Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

வாட்ஸ்அப் சுதந்திர தின ஸ்டிக்கர்ஸ்: அட.. இது தெரியாம போச்சே!

தேசம் முழுவதும் உள்ள மக்கள் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராக உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகவும் உணர்வப்பூர்வமான இந்நாளை இன்னும் கூடுதல் சுவாரசியமாக மாற்ற பல சமூக ஊடக தளங்கள் ஏற்கனவே தங்கள் சொந்த ஹேப்பி இந்திபென்டன்ஸ் டே 2020 ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

சரி வாட்ஸ்அப் ஏதேனும் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளதா?

முன்னதாக கடந்து சென்ற மற்ற பெரும்பாலான சிறப்பு தினங்களை போலவே வாட்ஸ்ஆப் இதுவரை எந்த ஹேப்பி இந்திபென்டன்ஸ் டே 2020 ஸ்டிக்கரையும் அறிமுகப்படுத்தவில்லை என்றே தெரிகிறது. எனவே, நீங்கள் ஹேப்பி இந்திபென்டன்ஸ் டே 2020 ஸ்டிக்கர்களை வாட்ஸ்அப் வழியாக அனுப்ப விரும்பினால், ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்களை பொறுத்தவரை, கூகுள் பிளேவில் 15 August - Independence Day Sticker 2020, Independence day - 15 August Stickers For WhatsApp, Independence Day Sticker For WhatsApp மற்றும் பல மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்ஸ் அணுக கிடைக்கின்றன. இந்த மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் ஆப்கள் ஆனது வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற அனைத்து தொடர்புகளுக்கும் புத்தாண்டு 2020 ஸ்டிக்கர்களை அனுப்ப அனுமதிக்கும்.

இருப்பினும், இத்தகைய ஸ்டிக்கர் ஆப்களை நிறுவும் ஆப் சார்ந்த டெவலப்பர் மற்றும் ரீவ்யூ (மதிப்புரைகளை) சரிபார்த்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பட்டியலிடப்படுவதற்கு முன்பு மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் ஆனது சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் அவைகள் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வாட்ஸ்அப் வழியாக தொகுக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை நீங்கள் டவுன்லோட் செய்து அனுப்பலாம்.

நீங்களொரு ஐபோன் பயனர் என்றால், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்ப கீழே தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

-- உங்கள் ஐபோனில் உள்ள WhatsApp செயலியை திறக்கவும்

-- எதாவது ஒரு contact-ஐ திறக்கவும்

-- இப்போது chat box-ஐ கிளிக் செய்யவும்

-- பின்னர் சாட் பாக்ஸின் வலதுபுறத்தில் உள்ள ஸ்கொயர் ஐகானைக் கிளிக் செய்யவும்

-- அங்கே Stickers இருப்பதாய் நீங்கள் காண்பீர்கள், அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

-- அல்லது பயனர்கள் திரையில் தோன்றும் “+” ஐகானை கிளிக் செய்து கூடுதல் ஸ்டிக்கர்களை பெறலாம்.

-- குறிப்பிட்ட ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ய ஸ்டிக்கரின் அருகில் உள்ள டவுன் ஏரோ (down arrow) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- தற்போது நீங்கள் டவுன்லோட் செய்த sticker pack ஆனது My Stickers வழியாக அணுக கிடைக்கும், அதில் ஒன்றை தேர்வு செய்து உங்களின் நண்பர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பிற தொடர்புகளுக்கோ அனுப்பலாம்.

நீங்களொரு ஆண்ட்ராய்டு பயனர் என்றால், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்ப கீழே தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

- உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் WhatsApp செயலியை திறக்கவும்.

- விருப்பமுள்ள contact-ற்குள் நுழையவும்

- பின்னர் chat box-ஐ கிளிக் செய்யவும்

- இப்போது GIF விருப்பத்திற்கு அருகில் இருக்கும் Square ஐகானை கிளிக் செய்யவும்

-- அங்கே உங்களிடம் ஏற்கனவே இருக்கும் Stickers-ஐ காண்பீர்கள்

-- கூடுதல் ஸ்டிக்கர்களை பெற திரையில் காட்சிப்படும் “+” ஐகானை கிளிக் செய்யவும்.

-- இப்போது உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் பேக்கை தேர்வு செய்து, அதை டவுன்லோட் செய்ய அதன் அருகில் உள்ள down arrow விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- தற்போது நீங்கள் டவுன்லோட் செய்த sticker pack ஆனது My Stickers வழியாக அணுக கிடைக்கும், அதில் ஒன்றை தேர்வு செய்து உங்களின் நண்பர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பிற தொடர்புகளுக்கோ அனுப்பலாம், அவ்வளவுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக