>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 11 ஏப்ரல், 2020

    தன்னம்பிக்கை கொண்ட மனிதன்... இதை செய்ய மாட்டான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    ராமு : நீங்க கணக்கு வாத்தியாரா?
    சோமு : ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
    ராமு : வீட்டு நம்பர் 10ஃ12 அப்படீங்கறத 5ஃ6-ன்னு அடிச்சு போட்டிருக்கீங்களே அதவெச்சுதான்.
    சோமு : 😋😋
    --------------------------------------------------------------------
    அருண் : என்னடா மச்சான் தலையெல்லாம் ஒரே ஈரமா இருக்கு?
    பாபு : எங்க அப்பாக்கும், எனக்கும் சண்டைடா....
    அருண் : சண்டைன்னா தலைல எப்படிடா தண்ணி வரும்?
    பாபு : சண்டை முடிஞ்சதும் எங்க அப்பா என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு.
    அருண் : 😆😆
    --------------------------------------------------------------------
    கணவன் : இன்னைக்கு என் ஃபிரண்ட லஞ்சுக்கு கூப்பிட்டுருக்கேன்.
    மனைவி : என்ன நீங்க, எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு. விருந்து சமையல் வேற எனக்கு அவ்வளவா நல்லா வராது.. இப்ப போய்...
    கணவன் : அதுக்காகத்தான் கூப்பிட்டுருக்கேன். கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டான். அது வேண்டாம்னு சொல்றத விட நேரடியா காமிச்சுரலாம்னுதான் கூப்பிட்டேன்.
    மனைவி : 😡😡
    --------------------------------------------------------------------
    பேரன் : பாட்டி நான் பரீட்சைக்கு போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க.
    பாட்டி : நல்லா பாத்து எழுதிட்டு வாடா...
    பேரன் : நீங்க சொன்னாலும், சொல்லலைன்னாலும் அதான் பண்ணப்போறேன் பாட்டி.
    பாட்டி : 😳😳
    --------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...

    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.

    விளக்கம் :

    மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருபோதும் மறந்தும் சொல்லமாட்டார்.
    --------------------------------------------------------------------
    இது எப்படி இருக்கு?

    தேடலை குறைத்துக்கொள், நிம்மதியாவாய்...
    எதிர்பார்ப்பை தொலைத்துக்கொள், சந்தோஷமாவாய்...
    அதிக பேச்சை நிறுத்திக்கொள், தேடப்படுவாய்...
    --------------------------------------------------------------------
    வாழ்க்கை...!!

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கு பெயர் வாழ்க்கை இல்லை....
    இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு பெயர்தான் வாழ்க்கை...

    தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மனிதன் தன் தேவைக்காக எங்கும், எதற்கும் கைகட்டி நின்றதில்லை...

    முடியும் வரை போராடு...
    முடியவில்லை என்றால் சற்று ஓய்வெடுத்து மீண்டும் போராடு...
    ஏனெனில் இந்த உலகம் மிகப்பெரியது...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக