Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 ஜனவரி, 2020

ஒரு காகிதத்தை பெற... எதையெல்லாம் இழக்கிறோம் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

தெறிக்க வைக்கும் ஜோக்ஸ்...!!
கஸ்டமர் : ஏம்ப்பா... காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வெக்குற?
வெய்டர் : நீங்கதான் சார்... 'கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.
கஸ்டமர் : 😟😟
-------------------------------------------------------------------------------------------------------
அருண் : சார் நீங்க எந்த கடவுளை கும்பிடுவீங்க?
குமார் : கல்யாணத்துக்கு முன்னாடியா? கல்யாணத்துக்கு பின்னாடியா?
அருண் : கல்யாணத்துக்கு முன்னாடி...
குமார் : கல்யாணத்துக்கு முன்னாடி முருகரைதான் ரொம்ப பிடிக்கும்...
அருண் : அப்போ கல்யாணத்துக்கு அப்புறம்?
குமார் : நான் வேண்டாத தெய்வமே இல்ல சார்...
அருண் : 😱😱
-------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கடி...!!
சீப்புக்கும், வாழைப்பழ தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!

சீப்பு தலை வாரும், வாழைப்பழத் தோல் காலை வாரும்.

உங்க இளமைக்கும், ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
திருப்பிப் படி...!!
திதி

மாமா

காக்கா

தேருவருதே

மோருவருமோ

விகடகவி

நீதிபதிநீ

குடகு

வாழ்வா
-------------------------------------------------------------------------------------------------------

பணத்தின் மோகம்...!!
பணம் என்ற காகிதத்தை பெற...
சிலர் அன்பை இழக்கின்றனர்...
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்பை இழக்கின்றனர்...
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...
சிலர் மனிதநேயத்தை இழக்கின்றனர்...
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...
-------------------------------------------------------------------------------------------------------

சொல்லோடு விளையாடு...!!
இந்த சொற்களில் உடல் உறுப்பின் பெயர் ஒளிந்து கொண்டிருக்கிறது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

வெளவால்

சாம்பல்

துறைமுகம்

செவ்வாய்

வடிகால்

தோல்வி

முடிவு

முதலை

விடை :

வால், பல், முகம், வாய், கால், தோல், முடி, தலை.
-------------------------------------------------------------------------------------------------------

மாற்றம்...!!
யாரும் தானாக மாறுவதில்லை... யாரோ ஒருவரால் மாறுகிறோம்...

நல்லவராக...

கெட்டவராக...

ஏமாளியாக...

அறிவாளியாக...

முட்டாளாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக