சிரிக்கலாம் வாங்க...!!
ஆசிரியர் : எதற்கு கலர் கலரா நூல் கொண்டு வந்து வெச்சிருக்க?
மாணவன் : நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்குற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
ஆசிரியர் : 😩😩
--------------------------------------------------------------------------------------------
ஒரு குட்டி கதை...!!
24 வயது வாலிபன் ஒருவன் ரயிலின் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான். 'அப்பா இங்கே பாருங்கள்", மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று! அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்தார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
'அப்பா மேலே பாருங்கள்", மேகங்கள் நம்மோடு வருகின்றன. என்றான், இதைக்கேட்ட தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் 'நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக்கூடாது என்றனர்." அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார். நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.
என் மகனுக்கு பிறந்ததிலிருந்தே பார்வை இல்லை. இன்றைக்குதான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்.
உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சரியப்படவும் வைக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழுங்கள்...!!
எறும்பு பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை.
நாய் சிங்கத்தை பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப்படவில்லை.
யானை ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
காகம் குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை.
சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை..!
நாற்காலி போல் கட்டில் இல்லை...!
ஒரு மரத்தின் பழங்களிலேயே ஒன்று போல் மற்றொன்று இல்லை...!!
ஒரு தாய் வயிற்று பிள்ளைகளிலேயே ஒருவர் போல் மற்றொருவர் இல்லை...!!
நேற்று போல் இன்று இல்லை...!!
இன்று போல் நாளை இல்லை...!!
அதனதன் வாழ்க்கையை அது வாழ்கிறது...!!
நீ மட்டும் ஏன் பொறாமைப்படுகிறாய்?
நீ ஏன் அடுத்தவனைப் பார்க்கிறாய்?
நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்?
நீ ஏன் வருந்துகிறாய்?
நீ ஏன் ஏக்கப் பெருமூச்சு விடுகிறாய்?
உன் வாழ்க்கை விஷேசமானது...!!
நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது...!!
நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது...!
நீ அடுத்தவனுடைய வாழ்க்கையை வாழ முடியாது...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக