உங்களுக்கு
Fake news என்றால் என்னவென்று தெரியும்? Morphed photos என்றால் என்னவென்று தெரியும்?
ஆனால் இதையெல்லாம் விட ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
அது Deepfake Video Technology தான் என்பது பற்றி தெரியுமா? இந்தியாவிற்குள் படர்ந்துள்ள
Deep fake Tech என்றால் என்ன? Deepfake video என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள்
தான் என்ன? வாருங்கள் அலசலாம்!
ஏற்கனவே
1008 பிரச்சனைகள், நடுவுல இது வேறயா?!
இந்திய
ஸ்மார்ட்போன் பயனர்கள் தினமும் சந்திக்கும் 1008 பிரச்சனைகளில் மிகவும் முதன்மையான
இரண்டு பிரச்சனைகளாக - போலி செய்திகள் (Fake News) மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட
புகைப்படங்கள் (Morphed Photos) பார்க்கப்படுகிறது, அதாவது ஒருவரின் உடலையும்,
மற்றொரு முகத்தையும் இணைத்து வெளியிடப்படும் புகைப்படங்கள்.
சமீப
காலமாக, குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் வழியாக
தவறான தகவல்கள் பரவி, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதை அதிகம் பார்க்க முடிகிறது.
பல சந்தர்ப்பங்களில் அது மக்களை வன்முறையின் பக்கம் தள்ளிவிடுகிறது மற்றும் நாடு
முழுவதும் அசம்பாவிதங்கள் நிறைந்த சம்பவங்களைத் தூண்டுவதற்கும் வழிவகுக்கிறது.
எதையெல்லாம்
நம்பலாம்? எதையெல்லாம் நம்ப கூடாது? போலி செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி? அதை
தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பது எப்படி? போன்ற போலி செய்திகளுக்கு எதிரான தெளிவை
மற்றும் புரிதலை மக்கள் மெதுவாக கற்றக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,
இந்தியாவில் தற்போது ஒரு புதிய சிக்கல் கிளம்பியுள்ளது - அது டீப்ஃபேக் வீடியோஸ்
(Deepfake videos) ஆகும்.
இந்த
டீப்ஃபேக் வீடியோக்கள் ஆனது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அதாவது ஆர்டிபிஷியல்
இன்டெலிஜென்ஸை பயன்படுத்தி போலி வீடியோக்கள் உண்மையானதாகத் தோன்றும்படியும், அது
போலியானது தான் என்பதை வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் பார்வையாளர்கள் அடையாளம் காண
முடியாதபடியும் மாற்றுகிறது.
எடுத்துக்காட்டாக,
டீப்ஃபேக் நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு முக்கியமான பிரபலம் ஒருவரின் வீடியோவில்
அவர் குறிப்பிட்ட வார்த்தையை சொல்வது போன்றும், அல்லது குறிப்பிடத்த செயலை செய்வது
போன்றும் Manipulate செய்யலாம், அதாவது மாற்றி அமைக்கலாம். பார்வையாளர்களுக்கு
அந்த வீடியோவில் இருப்பது "அதே" நபர் தான் இந்த செயலை செய்கிறார் அல்லது
இந்த வார்த்தையை பேசுகிறார் என்பது போல் தோன்றும்.
புகைப்படங்களை
விட வீடியோக்கள் தான் மிகவும் நம்பகமான தகவல்களாகக் கருதப்படுவதால், இதுபோன்ற
டீப்ஃபேக் நுட்பங்கள் வழியாக மனிபுலேட் செய்யப்பட்ட வீடியோக்கள் வாட்ஸ்அப்,
பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் மிகவும் எளிமையாக பரவுகிறது,
நம்பப்படுகிறது, ஆம்! நிச்சயமாக அது உருவாக்க பட்டதற்கான நோக்கத்தையும்
(சலசலப்புகளை) நிறைவேற்றி காட்டுகிறது.
போலி செய்திகளை விட
டீப்ஃபேக் வீடியோக்கள் மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் அது மிகவும் எளிதாக மக்களை
முட்டாளாக்குகின்றன!
வாட்ஸ்அப்,
பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் அனுப்பப்படும் வீடியோக்கள் பொதுவாக குறைந்த
தெளிவுத்திறன் கொண்டவை என்பதால், போலி வீடியோவை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
போலிச் செய்திகளைப் பற்றி மக்கள் அதிகளவில் விழிப்புடன் இருக்கிறார்கள், எனவே
அவர்கள் படித்த செய்தியானது உண்மைதானா என்று ஆராயும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
ஆனால் டீப்ஃபேக் வீடியோக்கள் மிகவும் நம்பகமானதாகத் தோன்றும் மேலும் அவர்கள் இதை
ஆராய்ந்து பார்ப்பதும் கிடையாது. ஆக கண்டுபிடிக்க முடியாத போலியான வீடியோக்கள்
சமூக வலைத்தளங்களில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது.
தவறான தகவல்களை
பரப்புவதற்கு செல்வாக்குமிக்க தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆழமான வீடியோக்களைப்
பயன்படுத்தலாம்!
டீப்ஃபேக்
வீடியோ தொழில்நுட்பத்தை ஒரு செல்வாக்கு மிக்க தலைவரின் உண்மையான வீடியோவில்
பயன்படுத்துவதால், அதை ஒரு உண்மையான வீடியோ என மிகவும் எளிமையாக காட்சிப்படுத்த
முடியும். ஆனால் உண்மையில் அது அவரோ / அவளோ சொன்னதற்கு நேர்மாறாக இருக்கும்.
டீப்ஃபேக்
வீடியோக்களை சாமானியர்களால் அடையாளம் காண்பது கடினம்!
டீப்ஃபேக்
வீடியோக்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட அதிநவீன கருவிகள்
பயன்படுத்தப்படுவதால், ஒரு போலி வீடியோ கிளிப்பை ஒரு முறை பார்ப்பதின் வழியாக,
சாதாரண மனிதர்களால் அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
பேசுவதை மிகவும்
ஈஸியாக மாற்ற முடியும்.
குறிப்பிட்ட
மற்றும் ஒரிஜினல் வீடியோவில் உள்ள ஒரு நபர் என்ன பேசுகிறார் என்பதை மாற்ற
டீப்ஃபேக் வீடியோஸ் தொழிநுட்பத்தை எளிதாகப் பயன்படுத்தலாம்.
டீப்ஃபேக்
வீடியோக்கள் ஆனது இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விளம்பரங்களின் மூலம் சமூக
ஊடகங்களில் பரவினால், அந்த வீடியோவை பார்க்கும் யாரையும் அது நம்ப வைக்கும்!
இலக்கு
நிர்ணயம் செய்யப்பட்ட விளம்பரம் (Targeted advertising) என்றால் குறிப்பிட்ட
நபரின் கூகுள் தேடல்களின் அடிப்படையில், அவருக்கான சரியான தகவலை ஆன்லைனில்
வழங்குவதாகும். இம்மாதிரியான Targeted advertising-ஐ அடிப்படையாக கொண்டு டீப்ஃபேக்
வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டால், அது அப்பாவி இணைய பயனர்களை தவறான
தகவல்களுக்கு அழைத்து செல்லும்.
போலி செய்திகளும்
புகைப்படங்களும் மக்களை வன்முறையாளர்களாக மற்றும் பட்சத்தில், டீப்ஃபேக்
வீடியோக்கள் விஷயங்களை இன்னும் மோசமாக்கும்!
பொதுவாகவே
வீடியோக்கள், பிளாக் போஸ்ட் மற்றும் புகைப்படங்களை விட நம்பகமானவை எனக்
கருதப்படுவதால், போலி கதைகளை நம்பு வைப்பதற்கும், அதன் விளைவாக குறிப்பிட்ட மக்களை
எளிதில் அணிதிரட்டுவதற்குமான ஆற்றல் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு உண்டு.
நடிகர்களால் கூட
கையாளப்படலாம்!
"மோசமான"
நடிகர்களால் பொய்யான விடயங்களை அல்லது தகவலை மக்களிடம் தள்ள டீப்ஃபேக்
வீடியோக்களைப் பயன்படுத்தலாம்.
டீப்ஃபேக் வீடியோ
தொழில்நுட்பத்தால் யதார்த்தமான தோற்றமுள்ள போலியான ஆபாச வீடியோக்களை உருவாக்க
முடியும்!
மற்றவர்கள்
நிர்வாணமாக இருக்கும்போது அல்லது பாலியல் செயலில் ஈடுபடும்போது அவர்களைப்
பார்ப்பதிலிருந்து பாலியல் இன்பம் பெறும் நடைமுறையைத்தான் voyeurism என்கிறோம்.
நாளுக்கு நாள் இந்த voyeurism அதிகரித்துக்கொண்டே போகும் நிலைப்பாட்டில், இதற்கு
ஆதரவாக போலியான ஆபாச வீடியோ கிளிப்களை உருவக்க டீப்ஃபேக் தொழில்நுட்பம் உதவுகிறது.
உளவு பார்க்கவும் கூட
டீப்ஃபேக் வீடியோக்களை பயன்படுத்தலாம்!
குறிப்பிட்ட
நபரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், அவர்கள் உளவு பார்க்கவும் கூட டீப்ஃபேக்
வீடியோக்களை பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக