Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 டிசம்பர், 2019

எறும்பு சொல்லும் உண்மை... வாழ்க்கை பாடம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இது சிரிப்பதற்கான நேரம்...!!

பாபு : என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறாரு.
சிவா : அப்போ எங்கேயாவது ஓடிட வேண்டியது தானே?
பாபு : அப்படித்தான் நினைச்சேன், ஆனா முதலாளி அவங்க பொண்ணுக்கிட்ட ஒழுங்கா படிக்கலன்னா 'இந்த கழுதைக்குத்தான் உன்னை கட்டி வைப்பேன்-னு" என்னை காட்டி சொல்றாரு. அதான் கொஞ்சம் வெய்ட் பண்றேன்.
சிவா : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------
உழைப்பும், பிழைப்பும்...!!

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு காட்டில் வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்று ஒரு தொழிற்சாலையை தொடங்கியது.

அங்கு ஒரு எறும்பு வேலை செய்தது. காலையில் வந்ததும் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் மிக சுறுசுறுப்பாக செய்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்றுவிடும்.

புலிக்கோ மிக்க மகிழ்ச்சி. தொழிற்சாலையில் லாபமும் கணிசமாக கிடைத்தது. ஒருநாள் புலிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.

எறும்பு தனியாக வேலை செய்கிறதே. அதை கண்காணிக்கின்ற அளவிற்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை. அதனால் எறும்பை கண்காணிக்கவும், ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை நியமித்தால் உற்பத்தி அதிகமாகும் என்று ஒரு தேனீயை கொண்டு வந்தது.

அந்த தேனீயும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி.

அந்த தேனீ புலியிடம், பாஸ் எறும்பை அதன் போக்கில் விட முடியாது. அதற்கு முறையான ஷிப்ட் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலாக வேலை வாங்கலாம் என்று கூறியது.

அதற்கு நிறைய வேலை இருக்கிறது. எனக்கு ஒரு செக்ரட்டரி வேண்டும் என்று கேட்டது. புலிக்கோ சந்தோஷம். இந்த தேனீ எவ்வளவு நன்றாக யோசிக்கிறது.. நமக்கு இத்தனை நாட்களாக இது தோன்றவில்லையே என்று ஒரு முயலை செக்ரட்டரியாக நியமித்தது.

அதிலிருந்து புலி தனக்கும் கொஞ்சம் தெரியும் என்பது போல் இருந்தது. வேலைக்கு ஆள் சேர்த்ததும் இனிமேல் எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட்டை வரைபடமாகவும், அட்டவணையாகவும் கொடுக்க வேண்டும் என்று கூறியது.

அதற்கு ஒருகம்ப்யூட்டர் பிரிண்டர் எல்லாம் வேண்டும் என்று முயல் கேட்டது. அவ்வாறே அனைத்தும் வாங்கிக் கொடுத்தது புலி. ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைந்துவிட்டது.

இப்பொழுது அதிகப்படியான நெருக்கடிகளால் விரக்தியடைந்த எறும்பின் வேலையில் தொய்வு ஏற்பட்டது. அதனால் உற்பத்தியிலும் தொய்வு ஏற்பட்டது.

அனைத்தும் சரியாக இருந்தும் ஏன் இப்படி? என்று புலி நினைத்தது. தேனீயின் ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமாக எடுத்துக்கூற ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை சேர்ப்போம் என்று ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது புலி.

ஏற்கனவே விரக்தியடைந்த எறும்பை இப்போது குரங்கும், அதன் பங்குக்கு குழப்பியது. அன்றைய தினத்திற்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு.

மேலும் உற்பத்தி குறைவால் நஷ்டத்தில் இயங்கியது தொழிற்சாலை. புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்று ஆந்தையை நியமித்தது.

ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியாக...

தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமாக ஆள் இருப்பதே காரணம். யாரையாவது வேலையை விட்டு நீக்கிவிட்டால் நிலைமை ஓரளவு சீராகும் என்றது. யாரை எடுக்கலாம்? அதையும் நீயே சொல்லிவிடு.. என்றது புலி.

அதிலென்ன சந்தேகம்... சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான் என்று அதிரடியாக சொன்னது ஆந்தை.

இப்படித்தான் உலகெங்கும் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக