திண்டுக்கல்லில் இருந்து 99கி.மீ தொலைவிலும், வத்தலக்குண்டிலிருந்து 61கி.மீ தொலைவிலும், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது தான் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி.
சிறப்புகள் :
பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது.
இந்த அருவியை வந்தடைய கூரிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும்.
இங்கு முன்னாட்களில் கரடிகள் தண்ணீர் அருந்த வந்த காரணத்தால் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி என்று அறியப்படுகிறது.
மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம் இது.
இயற்கை விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும்.
பருவக்காலத்தின் போது எழில்மிகுந்து காணப்படுகிறது இந்த அருவி.
எப்படி செல்வது?
திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலாத் தலங்கள் :
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான் சோலை
செண்பகனூர் அருங்காட்சியகம்
டால்பின் மூக்கு பாறை
பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
அமைதி பள்ளத்தாக்கு
செட்டியார் பூங்கா
படகுத் துறை
வெள்ளி நீர்வீழ்ச்சி
கால்ஃப் மைதானம்
தற்கொலை முனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக