>>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 4 டிசம்பர், 2019

    சபரிமலை ஐயப்பன் கோவில்

     Image result for சபரிமலை ஐயப்பன் கோவில்
    யப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது.

      சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்க்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது.

    அமைப்பிடம்

      பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியாக கடல்நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது.

      ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

      சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மதம், இனம், தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.

      ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான அய்யப்பபக்தர்கள் நோன்பு மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மேலும் தமிழ் மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும் கோவில் நடை திறக்கப்படுகிறது.

    ஐயப்பனின் வேறு பெயர்கள்

      மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன், தர்மசாஸ்தா எருமேலிவாசன், ஹரிஹரசுதன், ஹரிஹரன், கலியுகவரதன், கருணாசாகர், லக்ஷ்மண பிராணதத்தா, பந்தளவாசன், பம்பாவாசன், ராஜசேகரன், சபரி, சபரீஷ், சபரீஷ்வரன், சபரி, கிரீஷ், சாஸ்தா, வீரமணி என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

    புனிதப் பயணம்

      புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 41 நாட்கள் கொண்ட விரதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்.

     அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ள%2Bர் கோவில்களுக்கு செல்ல வேண்டும்.

     மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக