பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில்
கடந்த ஜூன் மாதம் மாதம் முதல் காட்டு தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த காட்டு தீ நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறதே தவிர இன்னும் குறைந்த பாடில்லை. இந்த கடந்த 9 மாதத்தில்
78 ஆயிரம் காட்டுத்தீக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த காட்டுத்தீக்கு எதிராகவும் , அதனை
மக்களிடம் கொண்டு செல்லும் விழிப்புணர்வாகவும், ஹாலிவுட் நடிகர் லியாண்டர் டி காப்ரியோ
தனது சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்கள் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், காப்ரியோ இயற்கை பாதுகாப்பு தொண்டு
நிறுவனத்திற்கு சுமார் 3.5 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் நான்கொடை அளித்துள்ளார். அந்த
தொண்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் புகைப்படத்தை நடிகர் லியாண்டர் டி காப்ரியோ வெளியிட்டு
வைத்துள்ளார்.
இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜாய்ர் போல்சோனாரோ
கூறுகையில், அமேசான் காட்டு தீயை பற்றவைத்ததே லியாண்டர் டி காப்ரியோ நடத்திவரும் நிறுவனம்
தான் அவர்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் தான் தீ பற்றவைத்து இதனை அந்நிறுவனத்தை
சேர்ந்தவர்கள் புகைபடமெடுத்து லியாண்டர் டி காப்ரியோவிடம் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள்
அதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக