Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்தது கல் கேமராவோ..? கேமரா மேனுவல் இருக்கே..!


உதாரணம்
து இணைய யுகம். இன்று உலகத்தில், இணைய வெளியில் இல்லாத தரவுகள், விவரங்கள், விளக்கங்கள் எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
இந்த நிலை, இப்போது பொருட்களை வாங்குவதற்கும் வந்துவிட்டது. 

 ஹேர்பின் தொடங்கி ஏரோபிளேனில் பறக்க தேவையான உதிரி பாகங்கள் வரை கிட்ட தட்ட எல்லாமே ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கி விட்டது.
இப்படி ஆன்லைனில் ஆர்டர் போட்டு பொருட்களை வாங்கும் கலாச்சாரத்தை, நம் 90-ஸ் கிட்ஸ் கூட வெகு ஜோராக, செய்யத் தொடங்கிவிட்டாக்ரள். 

ஆனாலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் ஒன்று தவறான பொருட்களை டெலிவரி செய்வது.

உதாரணம் 

சமீபத்தில் கேரள மாநிலத்தில் இப்படி ஒரு தவறான டெலிவரியைச் செய்து இருக்கிறது ஃப்ளிப்கார்ட். கேரளாவின், கண்ணூர் மாவட்டத்தில் சுரேஷ் என்பவர், ஃப்ளிப்கார்ட்டில் சுமார் 27,500 ரூபாய்க்கு ஒரு கேமராவை ஆர்டர் செய்து இருக்கிறார். ஆர்டர் செய்த சில நாட்களுக்குப் பின் டெலிவரியும் வந்து இருக்கிறது.

அதிர்ச்சி 

ஃப்ளிப்கார்டில் இருந்து கேமரா டெலிவரி என்ற உடன் சுரேஷ் மிகுந்த ஆவலோடு தன் கேமரா பார்சலை கையெழுத்து போட்டு வாங்கிக் கொண்டார். அதே ஆவலுடன் தன் கேமரா பார்சலைத் திறந்து பார்த்தால், மரண அதிர்ச்சி...! கேமராவுக்கு பதிலாக சில டைல்ஸ் துண்டுகள்.

மேனுவல் 

இதில் இன்னொரு காமெடி என்ன என்றால்... இந்த டைல்ஸ் துண்டுகளோடு ஒரு கேமரா மேனுவல் வேறு வைத்து இருக்கிறார்கள். இப்போது தான் நமக்கு சந்தேகம் வருகிறது. சுரேஷ்-க்கு, ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்தது கல் கேமராவோ..? ஏன் என்றால் டைல்ஸ் உடன், கேமராவுக்கான மேனுவல் இருக்கிறதே அதனால் இப்படி தோன்றுகிறது.

ஃப்ளிப்கார்ட் தரப்பு 

இந்த முழு கதையும் ஃப்ளிப்கார்ட் நிறுவன தரப்பினருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள். சுரேஷ் ஆர்டர் செய்தது படியே, கேமராவை அடுத்த 7 நாட்களுக்குள் அனுப்பி வைப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். நல்ல வேளையாக இவர்களும் நம் அரசியல்வாதிகள் போல, தங்கள் தரப்பை நியாயப்படுத்த, இது தான் கேமரா என வாதாடவில்லை ஃப்ளிப்கார்ட்.

முதல் முறை அல்ல 

இப்படி ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக ஏதோ வேறு ஒரு பொருளை டெலிவரி செய்யும் சம்பவம் முதல் முறை அல்ல. இதற்கு முன்பு இதே போல ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருள் தருவது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதை ஃப்ளிப்கார்ட் மட்டும் அல்ல, அனைத்து இ - காமர்ஸ் நிறுவனங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக