Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

நேற்று விழுந்த நீர் இடியால் பச்சைமலையில் உருவான புதிய அருவி..!

நேற்று  விழுந்த நீர் இடியால் பச்சைமலையில் உருவான புதிய அருவி..! 


பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தை அருகில் உள்ள பச்சைமலை  உள்ளது. இந்த பச்சைமலையில் நேற்று வரை  மரம் , செடி மற்றும்  கொடிகளாக இருந்தது. ஆனால் நேற்று இரவு பெரிய சத்தத்துடன் விழுந்த நீர் இடி மூலம் தற்போது அந்த இடம் உருமாறி புதிய அருவியாக காணப்படுகிறது.
இந்த நீர் இடி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மலையைப் பிளந்து பாறைகளை புரட்டி போட்டு உள்ளது.  நீர் இடி விழுந்த இடத்தில் நீரூற்று உருவாகி தற்போது அருவியாக மாறியுள்ளது. இதை அறிந்த சுற்றுவட்டரபொதுமக்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
நீர் இடி விழுந்த நேரத்தில்  பூகம்ப போல நில அதிர்வை உணர்ந்ததாக அய்யர்பாளையம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக