செவ்வாய், 21 ஜனவரி, 2020

பெட்டிக்குள் ஒரு லட்சம்... மனைவியின் கேள்வி... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

சிரிக்க மட்டுமே !!
ஆசிரியர் : பூமி எத்தன டிகிரி சாய்வாக சுற்றுகிறது?
மாணவன் : படிச்சு டிகிரி வாங்குனவங்கக்கிட்ட கேக்குற கேள்விய என்கிட்ட ஏன் சார் கேக்குறீங்க?
ஆசிரியர் : 😐😐
--------------------------------------------------------------------------------------------------
கண்ணன் : உங்க மொபைலுக்கு ரொம்ப நாளா ட்ரை பண்றேன். Switch off ன்னு சொல்லுது?
ரவி : அதுதான் என்னோட caller tune
கண்ணன் : 😳😳
--------------------------------------------------------------------------------------------------
தத்துவ ஜோக்ஸ்...!!!
நேத்து உன்னையும், உன் தம்பியையும் பார்த்தேன்....
நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...
பின்ன? ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே...😀😀
--------------------------------------------------------------------------------------------------
துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.
வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.
இப்படி ஓவரா ரீல் விடுவதை...😝😝
--------------------------------------------------------------------------------------------------
கணவனும்... மனைவியும்...!!
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும், மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.

நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும்? என்று...

அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் 'நான் எனது கணவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை. அதுதான் காரணம்!" என்று.

அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம் 'இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்" என்று கேட்டாள்.

கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.

உள்ளே ஒரு முட்டையும், ஒரு லட்ச ரூபாய் பணமும் இருந்தது.

அதை பார்த்து 'இது என்ன?" என்று கேட்ட மனைவிக்கு... கணவன்...

'உனக்கு எப்பொழுதெல்லாம் துரோகம் செய்கிறேனோ.. அப்பொழுதெல்லாம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்" என்றான்...

கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்..

சரி... அதில் ஒரு லட்ச ரூபாய் இருக்கே. அது என்ன கணக்கு?

கணவன் சொன்னான்.

அது எல்லாம் முட்டைய வித்து சேத்து வச்ச காசு.... 😜😜
--------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?

ஒரு எறும்பை ஒரு யானை துரத்துச்சாம், அந்த எறும்பு கோவிலுக்குள்ள போய் ஒளுஞ்சுகிச்சாம், ஆன அந்த யானை அத கண்டுபிடிச்சுச்சாம்... அது எப்படி?
ஏனா... அந்த எறும்பு வாசல்ல செருப்ப கழட்டிவிட்டு போச்சாம்...😂😂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்