>>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • >>
  • 14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 21 ஜனவரி, 2020

    மியாவ்...🐈 மியாவ்...🐈 என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    மொக்கை ஜோக்ஸ்...!!
    ஆசிரியர் : ஏன்டா நேத்து school-க்கு வரல?
    மாணவன் : தாத்தா செத்துட்டாரு சார்...
    ஆசிரியர் : அப்பறம் எதுக்குடா பாட்டி செத்துட்டாங்கன்னு லீவ் லெட்டெர்ல எழுதி இருக்க?...
    மாணவன் : தாத்தா செத்துப்போன அதிர்ச்சில மாத்தி எழுதிட்டேன் சார்...
    ஆசிரியர் : 😩😩
    --------------------------------------------------------------------------------------------------
    ராமு : அவ‌ர் ப‌ல் டா‌க்ட‌‌ர் இ‌ல்ல... போ‌லி டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?
    சோமு : ப‌ல் ஆடுது‌ன்னு... இ‌ந்த டா‌க்ட‌ர் ‌கி‌ட்ட சொ‌ன்னது‌க்கு, பரதநா‌ட்டியமா? கு‌ச்சு‌ப்புடியா‌ன்னு? கே‌க்‌கிறா‌ரு...
    ராமு : 😝😝
    --------------------------------------------------------------------------------------------------
    மியாவ்... மியாவ்...!!
    ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான். சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்தபோது,

    வீட்டுக்காரன் : யாருடா அது?

    திருடன் : மியாவ்...

    வீட்டுக்காரன் : யாருடா அது?

    திருடன் : மியாவ் மியாவ் மியாவ்..

    வீட்டுக்காரன் : சமையல் கட்டு பக்கம் யாருடா அது?

    திருடன் : டேய் செவுட்டு நாயே...!! பூனடா...😿😿
    --------------------------------------------------------------------------------------------------
    குறளும்.. பொருளும்..!!

    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்.

    விளக்கம்:

    எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும். அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.
    --------------------------------------------------------------------------------------------------

    என்னவாக இருக்கும்? படித்து பாருங்க...!!
    ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப்பார்த்த அழகான ஒரு பெண் 'நீங்க என்னோட குடைக்குள்ள வந்தாலென்ன?"

    அதற்கு ஆண் வேண்டாம். நன்றி சகோதரி அப்டினு சொல்லிட்டு அவன் நடந்து போய்ட்டான் !!!

    கருத்து :

    கருத்தும் குருத்தும் ஒண்ணுமில்ல... அவனுக்குப் பின்னால் அவனோட மனைவி வந்துகிட்டிருந்தா...!!😜😜
    --------------------------------------------------------------------------------------------------

    சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!
    👉 மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்.

    👉 உன் அறிவு ஒரு விளக்கு, மற்றவர்கள் தங்கள் மெழுகுவர்த்திகளை அதில் ஏற்றிக்கொள்ளட்டும்.

    👉 செல்வம் பெருகப் பெருக ஆசை அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்.

    👉 அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம், அந்த அறிவை பெற ஒன்றே ஒன்றுதான் தேவை. அது ஒழுக்கம்.

    👉 வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக