Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஒரே ஒரு அடி... வெகுமதி இவ்வளவா?...😲 என்ன ஒரு புத்திசாலித்தனம்?

சிரிக்கலாம் வாங்க...!!
பாபு : மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயசாகி இருக்கலாம்... அதுக்குன்னு பொண்ணுவீட்டுக்காரங்க இப்படிப் பேசக்கூடாது...
ராமு : ஏன்...?
பாபு : மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்கன்னு? கேட்டா, பல்செட் போடுறோம்ன்னு சொல்றாங்க!
ராமு : 😂😂
--------------------------------------------------------------------------------------------------
மதிப்பு...!!
🌟 ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

🌟 ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

🌟 ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.

🌟 ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.

🌟 ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தினக்கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.

🌟 ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

🌟 ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.

🌟 ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

🌟 ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------

புத்திசாலித்தனம் - குட்டிக் கதை...!!
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார். அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகிவிட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக்குகளை எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார். ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக், தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார். சரி என்று அவரும் ஒப்புக்கொண்டார். மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்களை எல்லாம் வைத்திருந்தார். கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்துவிட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார். பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார். இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார். அதுவும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபாரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான். அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது. அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் அந்த பையன் வந்திருந்தான். அதில்,

1. சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.

2. எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய் என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க... அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கணும்...🤗😌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக