Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

நீங்கள் எதிர்பார்க்காத பதில்கள்... யோசியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
பாபு : என்ன சார் இது, சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம், சிக்கனைத் தனியா சாப்பிடறீங்க?
ராம் : என்ன பண்றது? டாக்டர் என்னை சாப்பாட்டுல சிக்கன் சேத்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே.
பாபு : 😳😳
--------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கான சில வரிகள்..!
🎉 உங்களுக்கு தைரியமும் சாமர்த்தியமும் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். சாதாரண மனிதர்கள் வெற்றியை அடைகிறார்கள். திறமைசாலிகள் மனம் குழப்புவதால் தோல்வியைத் தழுவுகிறார்கள். மனக் குழப்பமின்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

🎉 ஆசையும், கோபமும் சேர்ந்தே மனிதனைக் கெடுக்கிறது. பால் தயிராவதைப் போல, ஆசை கோபமாக மாறுகிறது. பதட்டம், பொறாமை, பிறருடைய பொருளின் மீது ஆசை, அபகரித்தல், கொடிய வார்த்தை கூறுதல், கொடியவனாக இருத்தல் ஆகிய தீய பண்புகள் கோபத்தின் அடிப்படையில்தான் உண்டாகின்றன. கோபம் மற்ற நல்ல பண்புகளை அழிக்கும். நம்முடைய கண்களை மறைக்கும். நம்மால் திறமையுடன் செயல்பட முடியாது. அது நம்முடைய மன அமைதியைக் கெடுக்கும். கோபத்தைக் கைவிட்டு, அமைதியுடன் பழகக் கற்றுக் கொள்ளுங்கள்.

முடிந்தளவு இந்த முறைகளை பின்பற்றி வாழ பழகுங்கள். வெற்றிக்கனி மிகத்தொலைவில் இல்லை....
--------------------------------------------------------------------------------------------------

நீங்கள் எதிர்பார்க்காத பதில்கள்!
1. மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

அவரது கடைசி போரில்.

2. நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?

அந்த பக்கத்தின் கீழ் பகுதியில்.

3. காலை உணவிற்கு என்ன சாப்பிட முடியாது?

மதிய உணவு மற்றும் இரவு உணவு.

4. பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் பார்ப்பது என்ன?

இன்னொரு பாதி.

5. ஒரு சிவப்பு கல்லை நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?

கல் ஈரமாகிவிடும்.

6. ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?

அதை விட பெரிய கைகள் வேண்டும்.

7. ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால், அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?

அந்த சுவரைத்தான் ஏற்கனவே கட்டியாச்சே.

8. விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?

திருமணம்.

9. தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

தேர்வுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக