Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 22 பிப்ரவரி, 2020

Wife Is Wife... எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்க? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
மனைவி : குடிச்சீங்களா?
கணவன் : இல்லம்மா!
மனைவி : அப்புறம் ஏன் சூட்கேசை திறந்து வெச்சு டைப் பண்றீங்க...!
கணவன் : 😜😜
------------------------------------------------------------------------------------------------
இது உண்மையா?
ஏழு கழுதை வயசானாலும், என்னதான் நாத்திகம் பேசினாலும் நைட் தனியா தூங்கும்போது வீட்ல ஒரு சொம்பு திடீர்னு விழுந்துட்டா அவ்வளவுதான்... உசுரே போயிருது...😋😋

சின்ன பிரச்சனை தானே ஊதி தள்ளிவிடலாமேன்னு நினைக்கும் போதுதான், அதுமேல பேப்பர் வெயிட் வைச்சு வேடிக்கை பாக்குது இந்த வாழ்க்கை...😩😩

ஒருத்தன் தனியா மொபைல்ல பாத்து சிரிச்சா அதுக்கு காரணம் காதல் இல்ல... மீம்ஸ்...😂😂

புருஷனுக்கு இருக்க பசி அப்பவே போயிடும்... மனைவிக்கிட்ட இந்த வார்த்தையை கேட்கும்போது...
சாப்பிட்டு முடிங்க... உங்கக்கிட்ட ஒன்னு பேசணும்...🧐🧐

பணக்காரங்களை பாத்ததும் வராத பொறாமை... படுத்த உடனே தூங்குறவங்கள பாத்தா வருது...🤔🤔

எனக்கு நேரம் சரியில்லைன்னு ஜோசியர்கிட்ட போனா... நீ குடியிருக்கிற வீட்டை வித்துடுன்னு சொல்றாரு... ஆனா அதுக்கு ஹவுஸ் ஓனர் ஒத்துக்குவாரான்னு தான் தெரியல...😌😌
------------------------------------------------------------------------------------------------
நாம் புலம்புவது இரண்டே காரணங்களுக்காக....
ஒன்று... நமக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க மாட்டிங்குது...🤔

ரெண்டு... நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது...🙄
------------------------------------------------------------------------------------------------

Wife Is  Wife
ஒருவன் ஜெயிலில் இருந்து 12 வருடங்களுக்கு பிறகு தப்பித்து வீட்டுக்கு வருகிறான். மனைவி அவனை மேலும் கீழும் பார்த்து முறைத்துவிட்டு,

தப்பிச்சு 8 மணி நேரம் ஆச்சுன்னு TV-ல சொன்னாங்க. இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க? என்று கேட்டாள்.
------------------------------------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது. அவன் யார்?

2. வெளியில் விரியும், வீட்டில் சுருங்கும். அது என்ன?

விடை :

1. முள்
2. குடை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக