>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 11 மே, 2020

    இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிப்பதற்கான நேரம்...!

    பார்வையாளர் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம்தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.
    ஓவியர் : ரொம்ப நன்றிங்க.
    பார்வையாளர் : ஆமா.. மத்த ஓவியங்களை சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல.!!!
    ஓவியர் : 😏😏
    -------------------------------------------------------------------
    நோயாளியின் மனைவி : என் கணவருக்கு டெம்பரேச்சர் பாக்குறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க? 
    டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வெக்குறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு.
    நோயாளியின் மனைவி : 😡😡
    -------------------------------------------------------------------
    பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்குறாரு. ஆனா அவருக்கு ஒன்னுமே தெரியாது போலிருக்கே.
    வேலு : எத வெச்சு சொல்ற?
    பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்குறாரு...!
    வேலு : 😂😂
    -------------------------------------------------------------------
    சிந்தனை துளிகள்...!

    🌟 வார்த்தை என்பது ஏணி போல.. நீங்கள் பயன்படுத்துவதைப் பொறுத்து ஏற்றியும் விடும்!! இறக்கியும் விடும்!!

    🌟 தண்ணீரைப் போல் இருங்கள்.. அதனால் ஒதுங்கிச் செல்லவும் முடியும், உடைத்தெறியவும் முடியும்!!

    🌟 கண்களை கொடுத்த இறைவன், பார்க்காமல் இருக்க இமைகளை கொடுத்திருக்கின்றார். தக்க சமயத்தில் தேவையான நேரத்தில் எதை உபயோகிக்க வேண்டுமோ அதை உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நம் வசப்படும்.
    -------------------------------------------------------------------
    விடுகதைகள்..!

    👉 ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அவன் யார்? 

    👉 பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன?

    👉 பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை. அது என்ன?

    விடைகள் :

    💫 ஊசி.

    💫 பனிக்கட்டி.

    💫 வானம்.
    -------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.

    விளக்கம்

    ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக