>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 4 ஜூன், 2020

    நோயாளியின் கனவு... டாக்டரின் மருத்துவம்... இறுதியில் நடந்தது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    கண்ணன் : நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்கு பிடிக்காது.
    தினேஷ் : என்ன பண்ணுவாங்க?
    கண்ணன் : என்னையும் அவளோட உட்கார வெச்சு சீரியல் பாக்க வெச்சுடுவாள்.
    தினேஷ் : 😜😜
    -----------------------------------------------------------------------
    தீபக் : மாப்ள... ஒரு நல்ல செய்தி... ஒரு கெட்ட செய்தி... எத மொதல்ல சொல்லட்டும்?...
    ராம் : கெட்ட செய்தி-ஐ சொல்லு...
    தீபக் : உன் கார் ஏர்பேக் செம்மையா வேலை செய்யிது டா
    ராம் : 😳😳
    -----------------------------------------------------------------------
    வெற்றி பெறுவதற்கான மந்திரங்கள்...!!

    ⭐ வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்...

    ⭐ நேரத்தை வீணாக்காதீர்கள்...

    ⭐ கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக உழையுங்கள்...

    ⭐ உங்கள் போட்டியாளர்களை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்...

    ⭐ சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை மாற்றுங்கள்...!!
    -----------------------------------------------------------------------
    உறவு...!!

    நம் அன்பு யாருக்கு பலமோ...
    நம் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ...
    நம் புன்னகை யாருக்கு வேண்டுதலோ...
    நம் நினைவு யாருக்கு பொக்கிஷமோ...
    நம் பிரிவு யாருக்கு பலவீனமோ...
    அவரே நமக்கான உறவு என கொள்வோம்...
    -----------------------------------------------------------------------
    அட சிரிங்க பாஸ்!!

    பாபு : டாக்டர்..! தினமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்.
    டாக்டர் : என்ன மாதிரியான கனவு?
    பாபு : தினமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுற மாதிரி கனவு வருது.
    டாக்டர் : தினமுமா?
    பாபு : ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயம் கழுதைகள் ஜெயிக்குது.
    டாக்டர் : இதுல நாலு மணி நேரத்துக்கு ஒருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இந்த மாதிரியான கனவுல இருந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
    பாபு : சரி டாக்டர்! நாளையில இருந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்குறேன்.
    டாக்டர் : ஏன் நாளையில இருந்து? இன்னைக்கு என்னாச்சு?
    பாபு : அது வந்து டாக்டர், இன்னைக்கு ராத்திரி பைனல்ஸ் இருக்கு.
    டாக்டர் : 😩😩

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக