Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

யாருக்கு என்ன பரிசளிக்க வேண்டும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

படித்ததில் ஈர்த்தது !

ஒரு நகரத்தில் ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்தது... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.

ஆனால் அவர்களுடன் இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி நாய் மட்டும் காவல்துறையின் வசம் சிக்கி கொண்டது. ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு காவல்துறையினரால் துப்புத்துலக்க முடியவில்லை.

காரணம், அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.! (உதாரணத்திற்கு... தமிழர்களின் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம் இதைப்போல...)

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர். எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக பன்மொழி கலைஞர் ஒருவரை அழைத்தனர்.
அவருக்கு 60 மொழிகள் வரை அத்துப்படி, அவர் ஒரு பேராசிரியரும் கூட, அவரும் வந்து விதவிதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...

அந்த நாய்க்கும் ஒன்றும் புரியவே இல்லை. கடைசியில் பழம்பெரும் மொழிகளில் உள்ள ஒரு மொழியில் அவர் பயிற்சியை துவக்கியதும் நாய்க்கு புரிய ஆரம்பித்தது. உடனே அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு உடனே கைது செய்தனர்.

அந்த பேராசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது. பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது. விருந்தில் அவரிடம் உங்களால் இந்த நகரம் பெருமை அடைந்தது. உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள் வழங்கப்படும் என்றனர்.

பணம் வேண்டுமா? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனக்கு உதவியாக இருந்த அந்த நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள் என்றார்.

அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர். ஒரு அதிகாரி கேட்டார்...

அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்?... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்... இந்த நாயை என் வீட்டிற்கு கொண்டு போய் என் மனைவி முன் நிறுத்த வேண்டும்.

ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம் அவள்... எந்த நாய் கேட்க போகுதுன்னு இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு சொல்வாள்... அதற்காகத்தான் இதை கொண்டு போகணும் என்று சொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
-----------------------------------------------------------------------------------------
வாழ்க்கையின் ஆறு தத்துவங்கள் !!

முதலில் நம்பு, பிறகு ஆண்டவனிடம் வேண்டு...
முதலில் பேசுவதை கேள், பிறகு பேசு...
முதலில் சம்பாதித்து, பிறகு செலவு செய்...
முதலில் யோசி, பிறகு எழுது...
முடியாது என்று விடுவதற்கு முன் முயற்சி செய்...
சாவதற்கு முன் வாழ்க்கையை வாழ்ந்து பார்...
-----------------------------------------------------------------------------------------
பரிசளிக்க விரும்பினால்...!

பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி !
உன் குழந்தைக்கு நல்ல நடத்தையை பரிசளி !
உன் மனைவிக்கு நல்ல தன்மையை பரிசளி !
உன் தந்தைக்கு மரியாதையை பரிசளி !
உன் தாய்க்கு பெருமையை பரிசளி !
உன் நண்பனுக்கு உன் உள்ளத்தை பரிசளி !
உன் மனசாட்சிக்கு நம்பிக்கையை பரிசளி !
உன் உறவுகளுக்கு உன் உணர்வை பரிசளி !
உன் சகோதரனுக்கு நேசத்தை பரிசளி !
எல்லா மனிதரிடமும் தாராள குணத்தை பரிசளி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக