கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள்
துவங்கியுள்ள நிலையில், அனைவரும் புத்தாடை, கேக், பரிசுகள் என பரபரப்பாக
இருக்கின்றனர்.
மேலும்,
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு உணவுகள் அடிப்படையாக உள்ளது. சிறுவர்கள் மற்றும்
பெரியோர்களுக்கு பிடித்த ஓர் உணவு வகைதான் கேக் ஆகும். அந்த வகையில், இந்த மாதம்
கொண்டாட உள்ள கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக் வீட்டிலேயே மிக எளிமையாக செய்யலாம்.
அவற்றை தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா
மாவு - 300 கிராம்
பேக்கிங்
பவுடர் - 3 டீஸ்பூன்
சோடா
உப்பு - 1ஃ2 டீஸ்பூன்
வெண்ணெய்
- 200 கிராம்
பொடித்த
சர்க்கரை - 250 கிராம்
முந்திரி
பருப்பு - 50 கிராம்
உலர்ந்த
திராட்சை - 50 கிராம்
செர்ரி
- 50 கிராம்
முட்டை
- 3
பிஸ்தா
பருப்பு - 50 கிராம்
சுல்தானாஸ்
- 50 கிராம்
பட்டை
மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கோக்கோ
- 1 டீஸ்பூன்
பால்
- 100 மில்லி
வெண்ணிலா
எசன்ஸ் - சில துளி
செய்முறை :
முதலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், சோடா
உப்பு, பட்டை மசாலா தூள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சல்லடையால் சலித்து
கொள்ளவும்.
அதன்பின் பொடித்த சர்க்கரையுடன், வெண்ணெய்
சேர்த்து நன்கு குழைத்து வைத்து கொள்ளவும். பிறகு முட்டைகளை ஒரு பாத்திரத்தில்
உடைத்து ஊற்றி நுரை வரும் வரை அடித்து கொள்ளவும்.
குழைத்து வைத்துள்ள வெண்ணெய் கலவையுடன், அடித்து
வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பிறகு சலித்து வைத்துள்ள மைதா மாவு கலவையில்
இவற்றை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். அதன்பின் கோக்கோ, பால் மற்றும் வெண்ணிலா
எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக செர்ரி பழங்கள், உலர்ந்த திராட்சை,
சுல்தானாஸ், பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரேயில் ஊற்றி
ஓவனில் 140 டிகிரி செல்சியஸ்-க்கு வைக்க வேண்டும்.
கேக்
வெந்ததும் வெளியில் எடுத்து, சூடு ஆறிய பின்னர் விரும்பியபடி அலங்காரம் செய்யலாம்.
பிறகு சுவையான இந்த கேக்கை சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுத்து மகிழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக