கோவையில் இருந்து ஏறத்தாழ 123கி.மீ
தொலைவிலும், வால்பாறையில் இருந்து ஏறத்தாழ 14கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியில்
இருந்து ஏறத்தாழ 79கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய குளு குளு நீர்வீழ்ச்சிதான்
சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி.
சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம். நடுவில்
ஆறுகள், அணைகள், கண்ணுக்கு குளுமையான புல்வெளிகள். இப்படி சுற்றுலாத்தலமாக நம்
முன் நிற்கிறது வால்பாறையில் அமைந்துள்ள இடங்கள்.
சின்னக்கல்லாரில் இருந்து 4கி.மீ தூரத்தில்
அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.
மரத்தால் கட்டப்பட்ட தொங்கு பாலம் வழியாகத்தான்
நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். இவ்விடம் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர்
பெற்றது.
வானம் விட்டுவிட்டு பூவாளி தூறல் போட்டுக்கொண்டே
இருக்கும். அதில் நனைவது அற்புதமான சுகம்.
பாறைகள் மீது ஏறிப்போனால் ஓடை போன்று அமைதியாக
சின்னக்கல்லாறு கண்ணாடி போல ஓடுவதை பார்க்கலாம்.
இங்குள்ள அருவியில் தண்ணீர் விழும்
ஓசையை கேட்பது மிகவும் இனிமையாக இருக்கும்.
மேலும் இந்த அருவி பாறைகளுக்கு நடுவே ஆறாக
ஓடுவதும், இருபுறமும் பச்சை பசேல் என காட்சியளிப்பதும் மிகவும் அழகான ஒன்றுதான்.
பசுமையின் அனைத்து பரிமாணங்களையும்
வெளிப்படுத்தும் பூஞ்சோலைகள் மற்றும் எழில் நிறைந்த மலைப்பகுதி.
பச்சை போர்வை போர்த்தியவாறு கண்ணுக்கும்,
மனதிற்கும் காட்சியளிக்கும் அழகிய இடமாக இது காணப்படுகிறது.
இயற்கை எழில் பொங்கும் இவ்வழகிய இடம்
சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்ந்த வண்ணம் உள்ளது.
எப்படி செல்வது?
கோவை மற்றும் வால்பாறையில் இருந்து
பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கோவை மற்றும் வால்பாறையில் பல்வேறு
கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
சோலையார் அணை.
ஆழியாறு அணை.
ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்.
குரங்கு நீர்வீழ்ச்சி.
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம்.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்
மற்றும் தேசிய பூங்கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக