>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 23 டிசம்பர், 2019

    யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?

     Image result for ருசக யோகம்
    யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். தோஷம் என்பது நாம் முன் ஜென்மத்தில் செய்த தீய வினைகளால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பமாகும்.

    இதை தான் நம் முன்னோர்கள் 'திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்" என்று சொன்னார்கள். செய்த வினையை யாராலும் மாற்ற முடியாது ஆனால் செய்யப்போகும் வினையை மாற்றும் ஆற்றல் நம் எல்லோர்க்கும் உண்டு.. இனி வரும் காலங்களில் வினையின் தன்மையை அறிந்து செயலாற்றி இப்பிறவியில் மட்டுமல்லாமல் எப்பிறவியிலும் யோகம் உடையவராக வாழ்வோம்.

     ருசக யோகம் :

    செவ்வாய் தனது வீட்களான மேஷம் மற்றும் விருச்சகத்தில் ஆட்சி பெற்றாலோ அல்லது மகரத்தில் உச்சம் அடைந்தாலோ கேந்திர ஸ்தானங்களில் நின்றாலும் அது ருசக யோகம் என்று அழைக்கப்படும்.

     ருசக யோகத்தால் ஏற்படும் நன்மைகள்:

     இந்த யோகத்தால் எல்லா காரியங்களிலும் ஜெயம் கொள்வான்.

     செல்வ செழிப்புகள் கொண்ட செல்வந்தனாய் வாழ்வான்.

     நல்ல பண்புள்ள உறுதியான உடல் அமைப்பை கொண்டவராக இருப்பார்கள்.

     தன்னை பற்றி எப்போதும் உயர்வாக எண்ணக் கூடியவர்.

     பத்ர யோகம் :

    புதன் தனது வீடான மிதுனம் மற்றும் கன்னியில் இருந்தாலோ அல்லது உச்ச வீடான கன்னியிலும் கேந்திர இடங்களில் நின்றால் அது பத்ர யோகம் என்று அழைக்கப்படும்.

     பத்ர யோகத்தால் உண்டாகும் நன்மைகள்:

     ஆயுள் பலம் அதிகரிக்கும்.

     கணிதம் மற்றும் கலைகளில் நன்றாக தேர்ச்சி அடைவார்கள்.

     சகல ஐஸ்வர்யங்களுடன் அதிகாரம் உடைய எல்லோராலும் விரும்பக்கூடிய அரசனை போல் வாழ்வார்கள்.

     அம்ச யோகம் :

    குரு தனது வீடான தனுசு மற்றும் மீனத்தில் இருந்தாலோ அல்லது உச்ச வீடான கடகத்தில் நின்று அது கேந்திரமான இடங்களில் நின்றால் அது அம்ச யோகம் என்று அழைக்கப்படும்

     அம்ச யோகத்தால் உண்டாகும் நன்மைகள்:

     பெருந்தன்மை கொண்ட அனைவருக்கும் கொடுக்கும் கொடை வள்ளலாக இருப்பார்கள்.

     நல்ல வசீகரம் உடைய இலட்சணமான முகம் கொண்டவராக இருப்பார்.

    குறைவற்ற புலன்கள் அமையப் பெற்று பிரபுவாகத் திகழ்வான்.

     மாளவ யோகம் :

     சுக்கிரன் தன் வீடான ரிஷபம் மற்றும் துலாமில் ஆட்சியோ அல்லது மீனத்தில் உச்சமாகி இருந்து அது லக்கினத்திற்கு கேந்திரம் ஏறினால் அது மாளவ யோகம் எனப்படும்.

     மாளவ யோகத்தில் உண்டாகும் பயன்கள் :

     செல்வ செழிப்புடன் வாழக்கூடிய செல்வந்தன் ஆவார்.

     எதிலும் அஞ்சா நெஞ்சுடன் தைரியத்துடன் செயல்படுவார்.

     நல்ல இல்லத்துணை அமைய பெற்று அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க கூடியவர்.

     ஸல யோகம் :

     சனி தன் வீடான மகரம் மற்றும் கும்பத்தில் ஆட்சியோ அல்லது துலாமில் உச்சமான இடத்தில் நின்று அது கேந்திரமடைந்தால் ஸல யோகம் உண்டாகும்.

     ஸல யோகத்தில் உண்டாகும் பயன்கள் :

     அதிகாரமுள்ள பணிகள் அமையும்.

     ஒரு நிறுவனத்தை தொடங்கி பல பேருக்கு சம்பளம் அளிக்கும் நிலை ஏற்படும்.

     தர்மகர்மாதி யோகம் :

     பத்துக்கு உடைய கர்மத்ஸ்தானம், ஒன்பதுக்கு உடைய பாக்கியத் ஸ்தானம் நல்லகேந்திர ஸ்தானங்களில் நின்றால் அது தர்மகர்மாதி யோகம் எனப்படும்.

     தர்மகர்மாதி யோகத்தில் உண்டாகும் பயன்கள் :

     செல்வாக்கு பெருகும்.

     சௌபாக்கியம் உண்டாகும்.

     ஐஸ்வர்யம் கிட்டும்.

     எதிர்பார்த்த இடங்களில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் உண்டாகும்.

     விரிஞ்சி யோகம் :

     லக்னாதிபதி, சனி மற்றும் குரு இந்த மூவரில் யாராவது ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ அடைந்து அது கேந்திரமானால் விரிஞ்சி யோகம் ஏற்படும்.

     விரிஞ்சி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     வேத ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

     சாஸ்திர சம்பிரதாயங்கள் அறிந்து தீர்க்க ஆயுளுடனும், குடும்ப வாரிசுகளுடனும் வாழ்வார்.

     அரசு சார்ந்த சன்மானங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

     நல்ல தெய்வ விசுவாசியாகவும், தெய்வ பக்தியுடனும் வாழக்கூடியவர்கள்.

     அஷ்ட லட்சுமி யோகம் :

     ராகு 6-ல் நிற்க கேது 12-ல் நிற்க குரு கேந்திரமான இடத்தில் இருந்தால் அது அஷ்ட லட்சுமி யோகம் எனப்படும்.

     அஷ்ட லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     சகல சம்பத்துகளும் கிட்டும்.

     சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று சுக போக வாழ்க்கை வாழ்வார்கள்.

    குருமங்கள யோகம் :

    குருவும் செவ்வாயும் மீனம், தனுசு, மகரம், மேஷம், விருச்சகம் மற்றும் கடகம் போன்ற இராசிகளில் இணைந்து நின்று அது கேந்திரமடைந்தால் குரு மங்கள யோகம் உண்டாகும்.

     குருமங்கள யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

     அதிகாரம் மற்றும் அந்தஸ்து உயரும்.

     கீர்த்திக்கு உடையவன் ஆவான்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக