>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 24 ஜூன், 2020

    எதிர்பாராத பரிசு... இறுதியில் ஏமாற்றம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -----------------------------------------------------------------------
             சிரிக்கலாம் வாங்க...!!
    -----------------------------------------------------------------------
    அருண் : வேடந்தாங்கலுக்கு வர பறவைகள் எல்லாம் எங்க இருந்து வரும்னு தெரியுமா?
    குமார் : தெரியாது?
    அருண் : வேற எங்கிருந்து வரும்... முட்டையில இருந்துதான் வரும்...😂
    குமார் : 😏😏
    -----------------------------------------------------------------------
    காதலி : என்ன சாப்பிட்ட?
    காதலன் : அதான் அப்பவே சொன்னேன்ல இட்லி சாப்பிட்டேன்னு...
    காதலி : சாப்பிட்டதையே உன்னால திருப்பி சொல்ல முடியல... எப்படி வாழ்க்கை முழுவதும் வாழப்போற... So Breakup பண்ணிக்கிறது best...
    காதலன் : 😳😳
    -----------------------------------------------------------------------
     ஹா.. ஹா... இது எப்படி இருக்கு?
    -----------------------------------------------------------------------
    வெளிநாட்டுக்காரர் ஒருவர் விபத்தில் சிக்கினார். அருகில் இருந்த நம்ம ஊருக்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார்.

    பிழைத்து எழுந்து வந்த வெளிநாட்டுக்காரர் நம்ம ஊருக்காரருக்கு விலை மதிப்புமிக்க உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

    வெளிநாட்டுக்காரரின் நேரமோ, என்னமோ தெரியவில்லை... மறுபடியும் ஒரு விபத்தில் சிக்கினார்.

    மறுபடியும் அதே நம்ம ஊருக்காரர் ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து அவரை காப்பாற்றினார்.

    உயிர் பிழைத்து வந்த அந்த வெளிநாட்டுக்காரர் இவருக்கு நன்றி கூறி, ஒரு கிலோ அல்வாவை பரிசாக கொடுத்தார்.

    நம்ம ஊருக்காரர் அவரை ஏமாற்றமாக பார்த்தார்.

    அதற்கு அந்த வெளிநாட்டுக்காரர் என்ன பார்க்கிறாய்... என் உடம்பில் உன் ரத்தம் தான் ஓடுது என்று கூறினார்...😇😇
    -----------------------------------------------------------------------
                   விடுகதைகள்...!!
    -----------------------------------------------------------------------
    1. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன?

    2. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?

    3. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும், பகலும் ஓடுவான். அவன் யார்?

    4. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?

    5. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன?

    6. மீன் பிடிக்கத் தெரியாதாம். ஆனால், வலை பிண்ணுவானாம். அவன் யார்?

    பதில்கள் : 

    1. முடி
    2. இதயம்
    3. கடிகாரம்
    4. வேர்க்கடலை
    5. தேங்காய்
    6. சிலந்தி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக