Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 ஜூன், 2020

செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது என்பது ஏன்?

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம் 

செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.

இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

எனவே முடிந்தளவு, அதற்க்கு முந்தைய நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ செலவை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணப்பற்றாக்குறையினை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக