Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

வீசிங் problem-னா இதுதான?.. புத்திசாலி கணவன்.. சிரிப்பதற்கான நேரம்.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
----------------------------------------------------------------------------------------------------
தீபக் : ஏன்டா... உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசுறாங்க?
பாபு : நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்" Problemன்னு.!!
தீபக் : 😂😂
----------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்குனா போதும்...
மாணவன் : வீட்டுலையா? இல்ல வகுப்புலையா? சார்...
ஆசிரியர் : 😩😩
----------------------------------------------------------------------------------------------------
சீனு : டாக்டர் அந்த ஆளு ஆப்ரேஷன் செய்ய சொல்லி நாயா அலையிறாரு... நீங்க என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க?
டாக்டர் : ஆப்ரேஷன் பண்ணா பேயா அலையிவாரு பரவால்லையா?
சீனு : 😳😳
----------------------------------------------------------------------------------------------------
டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபாய் இருக்கு... அவரு நாலு பிச்சைக்காரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா? தப்பா...?
மாணவன் : சரி தான் டீச்சர்...
டீச்சர் : எப்படி?
மாணவன் : நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பு இல்ல... டீச்சர்...
டீச்சர் : 😐😐
----------------------------------------------------------------------------------------------------
புத்திசாலி கணவன்... சிரிக்க மட்டுமே...!!
----------------------------------------------------------------------------------------------------
குழந்தையை அம்மா நீண்ட நேரம் திட்டிக் கொண்டிருந்தால்...
அது குழந்தையை அல்ல...
என புரிந்து கொள்பவரே புத்திசாலி கணவன்...
----------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
----------------------------------------------------------------------------------------------------
👉 கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்.

👉 அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

👉 பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.

👉 நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே.
நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ,
அதற்கான உந்துதல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக